வித்தியாவின் மரணத்துக்கு காரணமான வாயில் திணிக்கப்பட்ட உள்ளாடை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் உயிரிழப்புக்கு 3 காரணங்களைக் கூறலாம் என நிபுணத்துவ சாட்சியமளித்த சட்ட மருத்துவ அதிகாரி சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரின் வாய்க்குள் திணிக்கப்பட்டிருந்த உள்ளாடை தொண்டைக்குள் சிக்கியதால் அவர் உயிரிழந்திருக்க அதிக வாய்ப்புக் காணப்படுகிறது எனவும் சட்டவைத்திய அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயம் முன்னிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் போது சாட்சியமளித்த சட்டவைத்திய அதிகாரி, “மாணவியின் உயிரழப்பு மூன்று காரணங்களால் ஏற்பட்டு இருக்கலாம். ஒன்று தலையில் ஏற்பட்ட காயத்தால் அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவித்து இருக்கலாம்.

அது சில மணி நேரங்களில்தான் உயிரிழப்பை ஏற்படுத்தும். இது உள்ளக குருதிப் பெருக்கு அதனை கட்டுபடுத்துவது கடினம். சத்திர சிகிச்சை மேற்கொள்ளவும் முடியாது.

அதனால் உடனடியாக சிகிச்சை வழங்க முடியும். ஆனால் சிகிச்சையின் மூலம் காப்பாற்ற முடியும் என நிச்சயமாகக் கூற முடியாது. இரண்டாவது கழுத்துப் பட்டியால் கழுத்தை நெரித்து கட்டியதால் கழுத்து நெரிந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அதுவும் சில நிமிடங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும். மூன்றாவது வாய்க்குள் உள்ளாடையை திணித்தமையால் சுவாசப் பாதை அடைக்கப்பட்டு உயிரிழப்புச் சம்பவித்து இருக்கலாம்.

வாய்க்குள் உள்ளாடையை திணித்தமையால் மூச்சு திணறல் ஏற்பட சந்தர்ப்பம் குறைவு. ஏனெனில் மூக்கினால் சுவாசிக்க முடியும்.

ஆனால் வாய்க்குள் திணிக்கப்பட்ட துணி உமிழ் நீர் சுரப்பினால் ஈரமாகி அதனால் துணி பாரம் கூடி தானாக தொண்டை குழியை நோக்கி உட்சென்று சுவாச பாதையை அடைத்து இருக்கலாம்.

அல்லது தொண்டை குழி வரையில் துணியை அடைந்து இருக்கலாம். அவ்வாறாயின் அந்த உயிரிழப்பு சில நிமிடங்களுக்குள் நிகழலாம்.

வித்தியாவின் உடலில் 8 காயங்கள் இருந்தன. வித்தியாவின் பின் பக்கம், தலை, இடுப்பு, காலில் முள்ளு குத்திய அடையாளங்களும், கன்னம், உதட்டிலும் காயங்கள் இருந்தன.

வித்தியாவின் பெண் உறுப்பை பரிசோதனை செய்த போது கூட்டு வன்புணர்விற்கான காயங்கள் இருந்ததாகவும் சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்தார்.

Comments

comments

Related posts