சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! 14-ந் தேதி வரை ராசிநாதன் சூரியனும், 11ம் தேதி வரை செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். ஒதுங்கியிருந்த, பதுங்கியிருந்த நீங்கள் இனி எல்லா விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கைப் பிறக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களுக்கும் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரைக்குறையாக இருந்த வீடு கட்டும் பணியை முடிப்பீர்கள்.

சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். தீர்க்கமான, திடமான முடிவுகள் எடுப்பீர்கள். வேலைக் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். குரு 2-ல் தொடர்வதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணம் கூடி வரும்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆடை, அணிகலன் சேரும். ஆனால் 4-ல் சனி நீடிப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்திப்பீர்கள்.

பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் வீடு மாற முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். சுக்ரனும் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

பணவரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! புது வேலைக் கிடைக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். வசதி, வாய்ப்பு, நல்ல பின்னனி உள்ள பங்குதாரர்கள் வந்து சேருவார்கள்.

உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

Comments

comments

Related posts