வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியர் இருவருக்கு ஓட்டோ ஓட்டுனர் வடிவில் வந்த காம பேய்

காலி பேருந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 14 மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகளை காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக காவற்துறை அதிகாரிகள், காவற்துறை பாதுகாப்பில் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுமிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர்கள் இருவரும் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு சிறுமிகளும் சகோதரிகள் எனவும், அவர்கள் கம்புறுபிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதன்போது தெரியவந்துள்ளது.

கடந்த 28 ஆம் திகதி காலை இந்த சிறுமிகள், பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் வேறு ஒரு இடத்திற்கு சென்று உடைகளை மாற்றி கம்புறுபிட்டியவில் இருந்து அக்குரஸ்ஸ நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அன்று மாலை அந்த சிறுமிகள் இருவரும் கம்புறுபிட்டிய வந்துள்ள நிலையில், முச்சக்கர வண்டி சாரதியொருவர், வீட்டில் கொண்டு விடுவதாக கூறி முச்சக்கர வண்டியில் அவர்கள் இருவரையும் ஏற்றியுள்ளார்.

பின்னர் அவர், அந்த இரண்டு சிறுமிகளையும் தடுத்து வைத்து கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அடுத்த நாள் அந்த இரண்டு சிறுமிகளையும் அவர் கம்புறுபிட்டிய நகரத்தில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது அந்த சிறுமிகள் மாத்தறை நோக்கிச் சென்று அங்கிருந்து காலிக்கு வந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

பின்னர் அவர்கள் இருவம் காலி பேருந்து நிலையத்தில் இருந்த போது இவ்வாறு காவற்துறை பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

விசாரணைகளுக்கு பின்னர் குறித்த இரண்டு சிறுமிகளும் மேலதிக விசாரணைக்காக கம்புறுபிட்டிய காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments

comments

Related posts