விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

விளம்பரத்தை விரும்பாதவர்களே! குரு 11-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி கிட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். திடீர் லாபம் உண்டு. வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரம் பரபரப்புடன் காணப்படும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

ஆனால் 11ம் தேதி வரை செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் டென்ஷன் குறையும். ஆனால் அலைச்சல், சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்துச் செல்லும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் சத்து குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சுக்ரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் அழகு, இளமைக்கூடும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நண்பர்கள் சிலர் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் தியாக மனசைப் புரிந்துக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.

வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றம் உண்டு. அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

Comments

comments

Related posts