முஸ்லீம் தாய்மாருக்கு போட்டியாக களமிறங்க சிங்கள தாய்மார்களுக்கு அழைப்பு

சிங்களத் தாய்மாரே அதிகளவு பிள்ளைகளை பெற்றெடுங்கள் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

நுகேகொடை, அம்புல்தெனியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

எமது சிங்களத் தாய்மார் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுத்தால் மட்டுமே நாட்டையும், இனத்தையும் பௌத்த மதத்தையும் காப்பாற்ற முடியும்.

எங்களது சிங்களத் தாய்மார் சிறிய குடும்பம் தங்கம் என்ற எண்ணக்கருவின் பிரகாரம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெற்று வளர்க்கின்றார்கள்.

தாங்கள் பிள்ளைகளை பெற்று வளர்க்காது முஸ்லிம்களை திட்டுகின்றார்கள்.

முஸ்லிம் தாய்மார் நான்கு, ஐந்து, ஆறு பிள்ளைகளை பெற்று வளர்க்கின்றார்கள்.எங்களது சிங்களத் தாய்மாருக்கும் அதிகளவான பிள்ளைகளை வளர்க்க முடியும்.

முடிந்தளவு சிங்கள இனத்தை விஸ்தரிக்குமாறு நான் கோருகின்றேன்.

சிங்கள இனத்தை போசிப்பதன் மூலம் மட்டுமே பௌத்த மதத்தையும், நாட்டையும், இனத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts