மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்துவிடாதீர்கள். வாயுத் தொந்தரவு தான். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாயு பதார்த்தங்களையும் தவிர்த்துவிடுங்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தூக்கம் குறையும். உள்மனதிலே சின்ன சின்ன குழப்பங்களும், பயமும் வந்துச் செல்லும். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்திற்கு களங்கம் வந்து விடுமோ என்றெல்லாம் களங்காதீர்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இருசக்கர வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். ஆனால் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். 4-ல் குரு நிற்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

6-ல் சனி வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. மனக்கசப்புகள் நீங்கும். வீண் விவாதங்கள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து இந்த மாதத்தில் விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.

பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழம், காய்கறி, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம் மூலமாக லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். தன் பலவீனங்களை சரி செய்துக் கொள்ள வேண்டிய மாதமிது.

Comments

comments

Related posts