நீர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு பஸ்ஸில் பயணம் செய்யும் நுளம்புகள்

நீர்கொழும்பு பஸ்களின் ஊடாக கொழும்பிற்கு அதிகளவில் நுளம்புகள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக நீர்கொழும்பில் இருந்து கொழும்பு செல்லும் சொகுசு பஸ்களிலேயே இந்த நுளம்புகள் செல்கின்றன.

குறித்த பஸ்களில் அதிகளவிலான நுளம்புகளை காண முடிவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் டெங்கு நுளம்பு தொற்று அதிகமாக உள்ள பிரதேசங்களில் நீர்கொழும்பு முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

இதன் காரணமாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு சிகிச்சை பிரிவிற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறு நுளம்புகள் பஸ்களில் தலைநகருக்கு செல்வதனால் டெங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

comments

Related posts