பாலத்தில் இருந்து குதித்த (O/L) மாணவியின் பொக்கெற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட விடயம்

பன்னிபிட்டியவில் – மேம்பாலமொன்றில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பாடசாலை மாணவி அவரது பெற்றோருக்கு எழுதியிருந்த கடிதமொன்று மருத்துவமனை தாதிமார்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் பாடசாலை உடையில் இருந்து குறித்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் , தனது காதல் தொடர்புக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்ததால் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த மாணவி மேம்பாலமொன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ள நிலையில் , அவர் ஹைலெவல் வீதியில் சென்ற வேன் ஒன்றின் மீது வீழ்ந்து படுகாயமடைந்திருந்தார்.

பின்னர் , உடனடியாக ஹொமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி மேலதிக சிகிச்கைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

விபத்தில் மாணவியின் முதுகெலும்பு முறிந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.

குறித்த மாணவியின் பாடசாலை பை மற்றும் காலணிகளை குறித்த மேம்பாலத்தில் இருந்து காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தை சேர்ந்த 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts