பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர். எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்? அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும். பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர். என்ன செய்ய வேண்டும்? காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம்,…

Read More

முல்லைத்தீவு பெருங்கடலில் இருந்து கிழம்பும் விநோத ஜந்துக்கள் – படங்கள் இணைப்பு

முல்லைத்தீவு பெருங்கடலில் கடல் பாம்புகள் சில கரை ஏறுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மாவட்டத்தின் தொடர் நாட்களாக வரட்சி நிலை ஏற்பட்ட நிலையில் தற்பொழுது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலின் இயற்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டிருகின்றது. அதனால் இவ்வாறு கடற்பாம்புகள் கரை ஏறுகின்றது என்று கரையோரப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு கடல் பாம்புகள் கரை ஏறுவது அரியதோரு சம்பவமாகவே தான் அறிவதாக அப்பகுதி முதியவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கரை ஏறும் பாம்புகள் மண்ணில் ஊர முடியாமலும் மீள கடலுக்கு செல்ல முடியாமலும் இருந்துள்ளதால் அந்தக் கடற்பாம்புகளை பிடித்து மீள கடலில் விட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

பாலத்தில் இருந்து குதித்த (O/L) மாணவியின் பொக்கெற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட விடயம்

பன்னிபிட்டியவில் – மேம்பாலமொன்றில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பாடசாலை மாணவி அவரது பெற்றோருக்கு எழுதியிருந்த கடிதமொன்று மருத்துவமனை தாதிமார்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பாடசாலை உடையில் இருந்து குறித்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் , தனது காதல் தொடர்புக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்ததால் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மாணவி மேம்பாலமொன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ள நிலையில் , அவர் ஹைலெவல் வீதியில் சென்ற வேன் ஒன்றின் மீது வீழ்ந்து படுகாயமடைந்திருந்தார். பின்னர் , உடனடியாக ஹொமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி மேலதிக சிகிச்கைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்தில் மாணவியின் முதுகெலும்பு முறிந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார். குறித்த மாணவியின் பாடசாலை பை மற்றும்…

Read More

தாயும் மகனும் சேர்ந்து தந்தையை கொன்றனரா?

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயனகம வக்கம பிரதேச நீரோடையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலம் கொலை செய்து தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தாய் மற்றும் மகனை இன்றைய தினம் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி மாலை 56 வயதுடைய எய்ச்.டி .சுனில்சாந்த என்பவரே இவ்வாறு சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இரவு விருந்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது மதுபோதையில் இருந்த தந்தை முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீண்டும் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு அழைத்துச்சென்று தாக்கி கொலை செய்து நீரோடைப்பகுதியில் தூக்கி வீசப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த நிலையிலே 26.06.2017 மாலை தாய் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியான மகனையும்…

Read More

கனடாவில் உயிரிழந்த தமிழ் பெண் கலைச்செல்வி இவர்தான்

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 45 வயதான இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தள்ளார். ஸ்காபிரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Canbe உணவகம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் அதிகாலை 1:13 மணியளவில் எரிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவு தெரிவித்துள்ளது. Ellesmere வீதியில் அமைத்துள்ள Canbe உணவகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் கலைச்செல்வி கடுமையான தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவினர் தெரிவித்தனர். உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம்…

Read More

முதியவரை ஏமாற்றி மோசடி செய்த இலங்கை பெண்

இலங்கையை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் அமெரிக்காவில் 90 வயது முதியவர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யலோலா சுரங்கனி மெக்கன்ட் என்ற பெண், அமெரிக்காவில் இயங்கும் ‘அவர்ரைம்’ சமுக வலைதளத்தின் ஊடாக, முதியவருடன் அறிமுகமாகி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து 310, 000 டொலர்களை களவாடியதாக இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க முதியவரின் கணக்கில் இருந்து 310, 000 டொலர்கள் பணம், யலோலா சுரங்கனி மெக்கன்டின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும், அதை அறிந்த புலனாய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பெண் அடுத்த மாதம் தமது…

Read More

அத்துபட்டி சிட்டிசனாக மாறியுள்ள இலங்கை மக்கள் – அரச மருத்துவர்கள் கலக்கத்தில்

நாடு தழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சைட்டம் எனும் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர். இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம் பெற்றுள்ள நிலையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களின் உயிர்களை கூட கவனத்தில் கொள்ளாத வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் வைத்தியர்களின் செயற்பாட்டினை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு வெளியிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமானமற்ற முறையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யாதிருக்க கடை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் எழுதப்பட்ட வாசகங்கள் பல்வேறு கடைகளில் ஒட்டப்பட்டுள்ளமையை புகைப்படங்கள் ஊடாக காண…

Read More

காத்தான்குடி மஞ்சந்தொடுவாயில் சாப்பாட்டு கடைக்குள் புகுந்த வெள்ளை வேன் – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாயில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வேனொன்று உணவு விடுக்குள் புகுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உணவு விடுதியும் வேனும் பலத்த சேதமடைந்திருக்கின்ற போதும் அதிருஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த வேன் வீதியருகிலிருந்த உணவு விடுதிக்குள் சடுதியாகப் புகுந்தபோது உணவு விடுதி ஊழியர்கள் அந்நேரம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், விபத்து இடம்பெறுவதை சட்டென உணர்ந்து கொண்ட உணவு விடுதி ஊழியர்கள் அங்கிருந்து ஓடித் தப்பித்துக் கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

தேநீரில் விஷம் கலந்து குடித்த பாடசாலை மாணவி – காரணம் இதுதான்

17 வயதான பாடசாலை மாணவியொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிமடை – அம்பகஸ்தொவ – கரகஹாஉல்பத பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையின் எச்சரிக்கையால் கோபமடைந்து இவ்வாறு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி தேநீரில் விஷத்தை கலந்து குடித்துள்ளதாக தெரியவருகின்றது. விஷம் உடல் முழுவதும் பரவியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Read More

தீவிரமடையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விவகாரம்

யாழ். பல்லைக்கழக மாணவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட முதல் தகவலில் பிழையான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டதா? என்பது தொடர்பான விசாரணைகள் உக்கிரமடைந்திருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட இரு மாணவர்கள் சார்பிலும் மன்றில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், விசாரணையின் போது சாட்சியாளர்களை பொலிஸ் தரப்பினர் விசாரணை என்னும் பெயரில் அச்சுறுத்தியது தொடர்பான அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். மேலும் இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் குறித்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக,…

Read More