அரச வைத்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி – சபாஷ் மைத்திரி அரசு

வெளிநாடுகளிலிருந்து 5000 மருத்துவர்கள் அழைத்து வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

மருத்துவர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து 5000 மருத்துவர்களை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக பாதுகாப்புத் துறைசார் மருத்துவர்களையும் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.ஏற்கனவே வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கையில் கடமையாற்றி வருகின்றனர்.

மேலும் வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு உதவ ஆங்கில அறிவுடைய மருத்துவ பணியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனைக்கு அரசாங்கத்தின் மற்றுமொரு தரப்பினர் வேறும் யோசனைகளை முன்வைத்த காரணத்தினால் இன்னும் வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து வரும் திட்டம் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts