16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி திருமணம் செய்த நபர்

நாகர்கோவிலில் 2 குழந்தைகளுக்கு தந்தையான 45 வயது நபர் 16 வயது சிறுமியை விலை பேசி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருசடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 16 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக “சைல்டு ஹெல்ப்லைனுக்கு“ அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், பூட்டியிருந்த வீட்டினுள் இருந்து 16 வயது சிறுமியை மீட்டுள்ளனர்,

அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன,

நாகர்கோவில் அருகே பள்ளம் மேசானி நகரில் தான் ராபர்ட் பெல்லார்மின் (41) வசித்து வந்துள்ளார். மீன்பிடிக்கும் தொழிலாளியான அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வெளிநாட்டுக்கு சென்றும் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் முட்டம் துறைமுகத்தில் கேண்டீன் வைத்தும், மீன் ஏலம் போடும் வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வந்தார். இதற்கிடையே ராபர்ட் பெல்லார்மினுக்கும், அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 2 குழந்தைகளையும் ராபர்ட் பெல்லார்மினின் மனைவி வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த ராபார்ட்டிற்கு உள்ளூரில் யாரும் பெண் தர முன்வரவில்லை, இதனையடுத்து நடனம் ஆடும் கும்பலை சேர்ந்த பெண்ணின் உதவியுடன் 16 வயது சிறுமியை ரூ.1 லட்சத்திற்கு விலை பேசி வாங்கி, திருமணம் செய்துள்ளார்.

அதன்பின்னர், சிறுமியுடன் தனியாக வசித்து வந்த இவர், அச்சிறுமியை தனது குடும்பத்தினர் யாருடனும் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சிறை வைத்துள்ளார்.

மேலும், அவர் வேலைக்கு செல்லும்போது வீட்டினை பூட்டிவிட்டு சென்றுவிடுவார், அக்கம்பக்கத்தினர் யாருடனும் பேசக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் தனியாக வீட்டிற்குள் சிறுமி இருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் தகவல் அளித்துள்ளனர்.

தற்போது, ராபர்ட் தலைமறைவாகியுள்ளார், அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Comments

comments

Related posts