பொத்துவில் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றல்

பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொத்துவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

comments

Related posts