15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாடகை அடிப்படையில் அறைகள் வழங்கும் நிறுவனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை குறித்த நபரை விளப்பமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தும்மலசூரிய பிரதேசத்தில் அறை வசதிகள் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பாளராக செயற்படும் நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை அவர் ஏமாற்றி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

தும்மலசூரிய பிரதேச தோட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிறுமியின் தாய் தந்தை கல்வி செலவை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமியின் கல்வி செலவை பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறி, அவரின் உறவினர் ஒருவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதன்போது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

தனது பாடசாலை நண்பி ஊடாக தான் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டமை தொடர்பில் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments

Related posts