வடமாகாண விவகாரம்! போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

கிளிநொச்சி பகுதியில் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாகக் போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாகண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த 19ஆம் திகதி கரைச்சிப் பிரதேச சபை சிற்றூழியர்கள் கடமை நேரத்தில் கையொப்பமிட்டு, போராட்ட நடவடிக்கைளை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சியில் பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு, கடமை நேரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments

Related posts