இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அனில் கும்ப்ளே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபை தம்மீது நம்பிக்கை வைத்தமைக்கு தாம் கௌரவமடைந்ததாகவும், கடந்த ஒரு வருடத்தில் அடைந்த சாதனைகளுக்கு அணி தலைவர், வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அனைத்து பெருமைகளும் சென்றடையும் என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், அவர் தமது ட்விட்டர் தளத்தில் பதவி விலகியமைக்கான காரணத்தையும் வெளியிட்டிருந்தார்.

கிரிக்கெட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள கும்ப்ளே, கிரிக்கெட் சபையின் நிர்வாகத்திற்கும், கிரிக்கெட் இரசிகர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts