அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் நிறைய குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை உங்களுக்காக சொல்லியிருக்கிறோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுக்கு : அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலக்காய் அதிமதுரம் : ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம். வால்மிளகு : வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்….

Read More

ஜாலியாக இருந்தபோது உள்ளே புகுந்த கணவர்.. கள்ளக்காதலருடன் அடித்து வெளுத்த மனைவி!

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்ததை பார்த்த கணவர் மீது இருவரும் தாக்குதல் நடத்தியது அதிர வைத்துள்ளது. நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் (48). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி பெயர் செல்வி (37). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். விளாம்பட்டி அருகே உள்ள முத்துலாபுரத்தில் ரவிச்சந்திரன் மருந்து கடை வைத்துள்ளார். அங்கு செல்வி வந்து மருந்து வாங்கியபோது விளாம்பட்டியைச் சேர்ந்த உக்கிரபாண்டி என்பவருடன் பழக்கமானது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செல்வியின் வீட்டுக்கு உக்கிரபாண்டி வந்தார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரமாக பார்த்து ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்து விட்டார். வந்தவர் மனைவி இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். தட்டிக் கேட்டார். ஆனால் உல்லாசத்தின்போது குறுக்கே வந்ததோடு இல்லாமல் தட்டி வேறு…

Read More

விஜய்யின் 61வது படத்தின் பெயர் இது தான்…

விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். நிஜமாகவே இந்த காம்பினேசன் மெர்சல்தான் காளைமாடு பின்னணியில் இருக்க கலக்கலான போஸ் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் பெயர் கூட மாட்டின் வால் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் காளையை அடக்கும் வீரராக நடித்திருக்கலாம். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களுக்க பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. ஏற்கனவே அட்லி – விஜய் காம்பினேசனில் தெறி வெளியாகி ரசிகர்களை தெறிக்க விட்டது. இப்போது மெர்சல்…

Read More

ஞானசார, சிவாஜிலிங்கம், றிசார்ட் பதியூதீன் ஆகியோருக்கு எதிராக விசாரணை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கிடைத்துள்ள 21 முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அமைய, கலகொட அத்தே ஞானசார தேரர், அமைச்சர் றிசார்ட் பதியூதீன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவுகளை ஊடக நிறுவனங்களிடம் இருந்து பெற்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தவிர கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் மத வழிபாட்டு தளங்கள்,வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 15 பேர்…

Read More

வடமாகாண விவகாரம்! போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

கிளிநொச்சி பகுதியில் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாகக் போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த 19ஆம் திகதி கரைச்சிப் பிரதேச சபை சிற்றூழியர்கள் கடமை நேரத்தில் கையொப்பமிட்டு, போராட்ட நடவடிக்கைளை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சியில் பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு, கடமை நேரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

வடக்கில் புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குரு குலராஜா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் சிலரிடம் சுயவிபர கோவையை வழங்குமாறு கேட்டு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டையடுத்து மாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த அமைச்சர்களின் பதவிகளை தற்காலிகமாக முதலமைச்சர் ஏற்று கொண்டிருக்கின்றார். புதிய அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக முதலமைச்சர் இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தங்களது சுயவிபர கோவைகளை நாளை மதியத்திற்குள் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் கேட்டிருப்பதாக கூறப்படுகின்றது. முதலமைச்சரின் இந்த சுயவிபரகோவை பெறும் நடவடிக்கையானது புதிய அமைச்சர்கள் தெரிவுக்கானது என கூறப்படுகின்றது.

Read More

வவுனியா செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி – படங்கள்

வவுனியா செட்டிக்குளம் – அரவிதோட்டம் பிரதேசத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செட்டிக்குளம் மெனிக்பார்ம் பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் பழங்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எனவும், காட்டில் பழம் பறிக்க சென்றிருந்த போது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

Read More

பருத்தித்துறை – புலோலி இளைஞன் பெற்றோல் குண்டு வீசியதாக கைது

யாழ். பருத்தித்துறை 1 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை யாழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். இதில் புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் மன்றில் முற்படுத்தப்பட்டு 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பருத்தித்துறை 1 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை பெற்றோல் குண்டு வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பெண்ணின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்

பெண்ணொருவரை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்டை, அந்த பெண் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, பொலிஸ் சார்ஜன்டை சம்பந்தப்பட்ட பெண் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப்பிட்டிகொல்லவா ஹதகல, ரலபனா என்ற பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ் நற்சான்று அறிக்கையை பெற கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றுள்ளார். பொலிஸ் பொதுமக்கள் தொடர்பு பிரிவுக்கு சென்று பொலிஸ் சார்ஜன்டை சந்தித்துள்ளார். அறிக்கையை பின்னர் தருவதாக பொலிஸ் சார்ஜன்ட் கூறியுள்ளார். இதன் பின்னர், பெண்ணின் வீட்டுக்கு இன்று சென்ற பொலிஸ் சார்ஜன்ட் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க பெண் அவரை பொல்லால் தாக்கியுள்ளதுடன் தொலைபேசியில் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளார்….

Read More

அத்தே ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் சரணடைந்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரர் இன்று முற்பகல் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் தமது சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்தார். இந்த நிலையில், அவர் முன்பிணையில் செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கியுள்ளார். அத்துடன், அவருக்கு எதிராக கடந்த 15 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெற்றுக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வடரெக விஜித தேரர் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் பலாத்காரமாக உள்நுழைந்து அச்சுறுத்தியமை தொடர்பாக ஞானாசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம்…

Read More