ஞானசார தேரரை சிங்கள பெளத்த மக்கள் நம்பவில்லை

பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து சிங்கள பெளத்த மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. பெளத்த மக்கள் வெறுக்கின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் காப்பாற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவரை கைதுசெய்ய முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவ் அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து நாம் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றோம். அதேபோல் மக்களும் இவர்களின் விடயத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஞானசார தேரர் விடயத்தில் பெளத்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்….

Read More

கூட்டமைப்பினரை தொடர்ந்து சமய தலைவர்களை சந்திக்கும் விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.மாவட்ட சமய தலைவர்கள் தற்போது சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்புடைய செய்திகள் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களுடன் சமாதான ரீதியில் செல்லவும் – யாழ் ஆயர்

Read More

சுனாமி எச்சரிக்கை விடுக்கும் பெருங்கடல் மிதவையை கண்டால் அறிவிக்கவும்

சுனாமி எச்சரிக்கை தொடர்பில் முன்னரே அறிந்து கொள்வதற்காக பெருங்கடலில் பொருத்தப்பட்டுள்ள சுனாமி தரவு மிதவை தரவு வழங்குவதனை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி முதல் இந்த தரவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தமான் தீவுக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையின் வட அட்சக்கோடு 7.01 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.07 இடத்தில் இந்த பெருங்கடல் மிதவை பொருத்தப்பட்டுள்ளது. எனினும் அதன் தற்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய சுனாமி எச்சரிக்கை தொடர்பில் விசேட செயற்பாடுகளை மேற்கொண்ட மிதவை அல்லது அதன் ஒரு பகுதி தொடர்பில் தகவல் அறிந்தால் 0719353009 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நாரா நிறுவனத்தின் பிரதிநிதியிடம் அறிவிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அதன் ஒரு பகுதியை கண்டுபிடிக்க முடிந்தாலும், அதற்கு முன்னர் பொருத்தப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொருத்த…

Read More

யாழ்ப்பாணத்தில் நாய் வளர்ப்பவரா நீங்கள்? – உங்களுக்கான இலவச சேவை இன்று முதல்

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று(19) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, இன்று திங்கட்கிழமை முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை பழம் வீதி, ஆறுகால்மடத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை ஆறுகால்மட சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி வரை 04 மணி வரை செழியன் வீதியிலும், 20 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை புதிய குடியிருப்பு சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை அராலி வீதி மானிப்பாய் ஓட்டுமதத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை ஆர்.சி.பாடசாலையடி நாவலர் வீதியிலும், நாளை(20) முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை புதிய குடியிருப்பு…

Read More

கருணாவின் வருகையினால் வவுனியாவில் அசாதாரண நிலை!

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவிருந்தது. எனினும், குறித்த பொது நோக்கு மண்டபம் கட்சி கூட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், கலந்துரையாடல் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள்

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பளப் பிரச்சினை முதலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் போக்குவரத்து அமைச்சருடன், இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில், குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் மேற்கொள்ள உள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Read More

லண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வேன் – பலர் உயிரிழந்துள்தளாக தகவல்

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது. இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு அவசர சிகிச்சை பிரிவு சென்றுள்ளது. தாக்குதல் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Seven Sisters வீதியின் ஒரு பகுதி தற்போது…

Read More

தின பலன் – 19 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மதியம் 1. 26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே ராசி ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் ராசி மிதுனம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில்…

Read More