வடக்கு மாகாண அலு­வ­ல­கத்­தின் காப்­ப­கத்­தி­லி­ருந்த ஆவ­ணங்­க­ளைச் சிலர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர் – சி.வி. விக்னேஸ்­வ­ரன்

“வடக்கு மாகாண சபை­யில் விசா­ரணை அறிக்கை குறித்த தீர்­மா­னம் அறி­விக்­கப்­பட்ட தினத்­தன்று இரவு, அலு­வ­ல­கத்­தின் காப்­ப­கத்­தி­லி­ருந்த ஆவ­ணங்­க­ளைச் சிலர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர்” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்னேஸ்­வ­ரன், நேற்­றைய தினம் புதிய தக­வலை வெளியிட்­டார்.

கடந்த 14ஆம் திகதி நடை­பெற்­ற­தா­கச் கூறப்­ப­டும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்­றைய தினமே முத­ல­மைச்­சர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

விசா­ரணை அறிக்­கை­யில் குற்­றம் காணப்­ப­டாத இரு அமைச்­சர்­கள் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காது விட வேண்­டும் என்று சம்­பந்­தர் எதிர் பார்க்கின்றார். அதில் பிரச்சினை இருக்கின்றது. இப்போதுதான் எனக்குச் சில விடயங்கள் தெரி யப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபையில் கடந்த 14ஆம் திகதி, விசாரணை அறிக்கையின் மீதான தீர்மானத்தை நான் அறிவித்தேன். அன்றைய தினம் இரவு, அலுவலகத்தினுள் நுழைந்த சிலர் காப்பகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைகள் நடைபெறும்போது, அந்தந்த திணைக்களங்களில் இருக்கின்ற அதிகாரிகள்தான் எமக்குச் சாட்சியமளிக்க வேண்டியிருக்கும். இவர்கள் தொடர்ந்து அங்கு இருக்கும்போது சாட்சியமளிக்கும் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். இவ்வாறான சிக்கல் இருக்கும் என்பதால்தான் விடுமுறை அறிவிப்பை விடுத்தேன் – என்றார்.

Comments

comments

Related posts