சுனாமி எச்சரிக்கை விடுக்கும் பெருங்கடல் மிதவையை கண்டால் அறிவிக்கவும்

சுனாமி எச்சரிக்கை தொடர்பில் முன்னரே அறிந்து கொள்வதற்காக பெருங்கடலில் பொருத்தப்பட்டுள்ள சுனாமி தரவு மிதவை தரவு வழங்குவதனை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி முதல் இந்த தரவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தமான் தீவுக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையின் வட அட்சக்கோடு 7.01 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.07 இடத்தில் இந்த பெருங்கடல் மிதவை பொருத்தப்பட்டுள்ளது.

எனினும் அதன் தற்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய சுனாமி எச்சரிக்கை தொடர்பில் விசேட செயற்பாடுகளை மேற்கொண்ட மிதவை அல்லது அதன் ஒரு பகுதி தொடர்பில் தகவல் அறிந்தால் 0719353009 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நாரா நிறுவனத்தின் பிரதிநிதியிடம் அறிவிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு அதன் ஒரு பகுதியை கண்டுபிடிக்க முடிந்தாலும், அதற்கு முன்னர் பொருத்தப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொருத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments

Related posts