திருமணமான 7 நாளில் எட்டுமாத கர்ப்பிணி ஆன உஷா – ஷாக் ஆன கணவன்

திருமணம் முடிந்த ஏழே நாளில் மனைவி எட்டு மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் கணவனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசுக்கும், பீமனஹள்ளியை சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 8-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் உஷா, மணமகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உஷா திடீரென்று தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் உஷா கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் வீட்டார், உஷா தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் உஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது உஷா தான் சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்தாகவும், அதனால் இருவரும் நெருங்கிய பழகியதால் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார். மேலும்…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு சுக்குநூறாகின்றது

தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாக தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்கு தமது ஆதரவையும் வழங்கியுள்ளன. இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் இம் மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியில்இருந்து வெளியேறி தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Read More

வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்கும் ராஜபக்ஷர்கள்!

வட மாகாண முதலமைச்சர் அல்லது ஊழலுக்கு தொடர்புடைய நபர்களை பாதுகாப்பதற்கு தாம் ஒரு போதும் அனுமதிக்க போவதிலலை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தெரிவித்துள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வட மாகண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன கைச்சாத்திடவில்லை. சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே, அவர் கைச்சாத்திடவில்லை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவிய போது, சில குற்றச்சாட்டு உள்ளவர்களை நீக்குவது குறித்து நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் கூறப்படும் இந்த விடயங்களுக்காக விக்னேஸ்வரன் நீக்கப்பட கூடாதென்றே நாங்கள் நம்புகின்றோம். இதற்கு முன்னர் வடமாகாண சபையினால், நாட்டின் சமாதானம், ஒற்றுமை மற்றும் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் யோசனை ஒன்று…

Read More

நுகேகொடவில் காதலியை குத்திக் கொன்ற இளைஞன்

நுகேகொட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நுகேகொட பழைய கெஸ்பேவ வீதி சூரியமல் மாவத்தையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் காதலரினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கெஸ்பேவ பழைய வீதிக்கு அழைத்து சென்ற காதலன், அங்கு வைத்து கொலை செய்துள்ளார். மத்துகம, ஹெவெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா சங்கல்பத்தி குணசிங்க என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் இதுவரையில் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

சிலாபத்தில் மனைவியை கிண்டல் செய்த நண்பனை கொலை செய்த நபர்

நண்பர் ஒருவரின் மனைவியை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.செய்த தனது மனைவியை கிண்டல் செய்து அவளைக் கோபப்படுத்தாதே என பல முறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாத காரணத்தினால் இன்று கிண்டல் செய்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரும், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபரும் மிக நெருங்கிய நண்பர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மனைவியை கிண்டல் செய்ததனை தாங்கிக் கொள்ள முடியாத நபர், தனது நண்பனை இன்று அதிகாலை வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதமொன்றினால் தலையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை நடத்திய நபரை பொலிஸார் கைது…

Read More

நாடாளுமன்றை கலைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு

நாடாளுமன்றை கலைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, கூட்டு எதிர்க்கட்சி ஆராய்ந்து வருவதாக வார இறுதி கொழும்பு பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு வலியுறுத்தி வருவதாகக் கூறிவரும் கூட்டு எதிர்க்கட்சி, நாடாளுமன்றைக் கலைத்து அரசியல் அமைப்பின் அடிப்படையில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முயற்சித்து வருகின்றது. நாடாளுமன்றை கலைப்பதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்த தற்போது தீவிரவமாக ஆராய்ந்து வருகின்றது. அரசியல் அமைப்பு குறித்த சட்டத்துறை வல்லுனர்களிடம் இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஆலோசனை பெற்றுக் கொண்டு வருகின்றனர். இரகசியமான முறையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு சென்றுள்ள அரசியல் அமைப்பு சட்ட வல்லுனர் ஒருவரை ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொண்டு, கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றை கலைப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான…

Read More

சிம்மம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

மக்களின் பாராட்டுகளைப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே! ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன லாபாதிபதியான புதனும், யோகாதிபதியான செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கைகூடிவரப்போகிறது. என்ன இருந்தாலும் உங்கள் ராசியில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் இருப்பதால் இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே உங்கள் முன்னேற்றம் வந்துசேரும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. தானாகவே முடிவெடுக்கும் நீங்கள், இதுபோன்ற காலங்களில் குடும்பப் பெரியவர்களையும், சான்றோர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நலம் தரும். மேலும் சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் பொழுது திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். திடீர் மாற்றங்கள்…

Read More

திருக்கோவில் பிரதேசத்தில் வாள்வெட்டு! இளைஞன் படுகாயம்

வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி கிராமத்தில் நேற்று இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் முதலாம் குறிச்சியைச் சேர்ந்த யோ.வதனராஜ் (வயது 22) என்ற இளைஞரே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த இளைஞன் தனது சகோதரியுடன், மரண வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த இளைஞன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இளைஞரின் முகம், கை மற்றும் இடுப்புப் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலாளர்களை நிராகரித்த அமைச்சர்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர்கள் சிலரை துறைசார் அமைச்சர்கள் வேண்டாம் என நிராகரித்துள்ளனர். அண்மையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கு சமாந்தரமாக அமைச்சு செயலாளர் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு ஜனாதிபதியினால் மூன்று அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சின் செயலாளர்களை அந்த மூன்று அமைச்சர்களும் நிராகரித்துள்ளனர். இது குறித்து மூன்று அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே இவ்வாறு அமைச்சுச் செயலாளர்களை நிராகரித்துள்ளனர். அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாக, அமைச்சின் செயலாளர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More