மட்டக்களப்பில் பற்றீஸ் இனுள் தங்க மோதிரம் மீட்பு – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல உணவக பேக்கரியில் இருந்து வாடிக்கையாளர் ஒருவரின் கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸில் இருந்து தங்கமோதிரம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை(18) குறித்த உணவக பேக்கரியில் கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸை வாடிக்கையாளர் சுவைக்க தயாரான நிலையில் குறித்த தங்க மோதிரம் ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.

மேலும் அத் தங்க மோதிரம் குறித்து உரியவர்கள் தங்களது ஆவணத்தை சமர்ப்பித்தால் அதை மீள வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை இரும்பு ஆணி என மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வாடிக்கையாளர் மீட்டுள்ள நிலையில் புதிதாக இத்தங்க மோதிரம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைபூட்டப்பட்ட நிலையில் இவ் உணவகத்தில் உணவருந்த சென்றவருக்குக்கே தங்கமோதிரம் பற்றிஸீனுள் கிடைத்துள்ளது.

Comments

comments

Related posts