திருமணமான 7 நாளில் எட்டுமாத கர்ப்பிணி ஆன உஷா – ஷாக் ஆன கணவன்

திருமணம் முடிந்த ஏழே நாளில் மனைவி எட்டு மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் கணவனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசுக்கும், பீமனஹள்ளியை சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 8-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் உஷா, மணமகன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உஷா திடீரென்று தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் உஷா கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் வீட்டார், உஷா தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் உஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது உஷா தான் சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்தாகவும், அதனால் இருவரும் நெருங்கிய பழகியதால் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சந்திரசேகரிடம் கூறியதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த வெங்கடேஷ் குடும்பத்தார் உஷா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Comments

comments

Related posts