தமிழ் தேசிய கூட்டமைப்பு சுக்குநூறாகின்றது

தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாக தெரியவருகிறது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்கு தமது ஆதரவையும் வழங்கியுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் இம் மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியில்இருந்து வெளியேறி தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

comments

Related posts