தமிழ் அரசு கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கை பிரயோகிக்க முயலுவேன் – இரா. சம்பந்தன்

வடமாகாண முதலமைச்சரினால் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றை இரா.சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்…

குறித்த அமைச்சர்கள் இருவரும் குற்றவாளிகளாக காணப்படாத போதிலும், நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பம் எழ காரணம்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகளை தாமதிக்காது எடுக்க வேண்டும்.

இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கை பிரயோகிக்க முயலுவேன்…

என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற முக்கிய சந்திப்பு ஒன்யைடுத்து, சீ.வி.விக்னேஸ்வரன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts