தமிழ் அரசு கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கை பிரயோகிக்க முயலுவேன் – இரா. சம்பந்தன்

வடமாகாண முதலமைச்சரினால் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றை இரா.சம்பந்தன் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்… குறித்த அமைச்சர்கள் இருவரும் குற்றவாளிகளாக காணப்படாத போதிலும், நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பம் எழ காரணம். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகளை தாமதிக்காது எடுக்க வேண்டும். இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கை பிரயோகிக்க முயலுவேன்… என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற முக்கிய சந்திப்பு ஒன்யைடுத்து, சீ.வி.விக்னேஸ்வரன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐந்து வயது சிறுமியை விபச்சாரி ஆக்கிய பெற்றோர் கைது

ஐந்து வயது சிறுமியை தேவதாசி பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளி விழா கொண்டாடிய சாமியார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மாவின்சுர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தேவதாசி பட்டம் கட்டி மதச்சடங்குகளை பெற்றோர் மற்றும் அந்த ஊரில் உள்ள கோவில் சாமியார் நடத்தியுள்ளனர். தற்போது பத்து வயதாகும் அந்த சிறுமி தேவதாசியாக வாழ்ந்து வருவதாகவும் குழந்தைகள் நல குழுவினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை தேவதாசி முறையில் இருந்து மீட்ட குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை தேவதாசியாக…

Read More

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களுடன் சமாதான ரீதியில் செல்லவும் – யாழ் ஆயர்

பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அமைச்சர் எஸ்.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ். ஆயரை சந்தித்து வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளை தெளிவுபடுத்தியுள்ளனர். இதன்போதே யாழ். ஆயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஊடகங்களிடம் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்தோடு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் தொடர்பில், நிபந்தனைகளின் அடிப்படையில் சமாதான ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் யாழ். ஆயர் குறிப்பிட்டதாக மாவை தெரிவித்தார். இதேவேளை, வடக்கு அமைச்சர்களது பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கலந்துரையாடி வருவதாகவும், முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படுமென தான் நம்புவதாகவும் ஊடகங்களிடம் மாவை சேனாதிராஜா…

Read More

முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது

எந்த காரணத்திற்காகவும் முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சில முச்சக்கர வண்டிகளின் சங்கம் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சுதில் ஜயருக் தெரிவித்தார். எவ்வாறாயினும், முச்சக்கர வண்டிகளில் உதிரிபாகங்களில் விலை அதிகரிப்பு மற்றும் பல பிரச்சினைகள் காரணமாக முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீட்டருக்கான கட்டணம அடுத்த மாதம் 10ஆம் திகதியில் இருந்து 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை சுயதொழில் வாய்ப்பு தொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவிகள் முன்னால் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞன்

பாடசாலை மாணவிகள் சிலரின் முன்னால் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மீகலேவ காவற்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல கலக்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளவர் மீகலேவ – பதவியகம பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர் ஒருவர் என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் போது 2 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனுடன் அவரை அரசாங்க மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று அடுத்த வழக்கு விசாரணையின் போது அறிக்கையொன்றை முன்வைக்குமாறு காவற்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இளைஞர் நீண்ட காலமாக இவ்வாறு மாணவிகள் முன்னால் அநாகரீகமாக நடந்து…

Read More

தர்மபுரம் பொலிஸாரிடம் மாட்டியது கொள்ளைக் கும்பல்

கடந்த 11ம் திகதி அதிகாலை தர்மபுரம் கல்லாறு பகுதியில் 60 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபா பணம் திருடர் குழுவால் கொள்ளை இடப்பட்டதனை அடுத்து சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்திருந்தனர். அவரிடம் பொலிஸார் நடத்திய மேலதிக விசாரணைகளின் பொழுது மேலும் 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் ஒருதொகை நகைகள், பணம் என்பனவுடன் 3 வாள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நகைகளில் தர்மபுரம் கல்லாறு பகுதியில் களவாடப்பட்ட நகைகளில் சிலவும் இம்மாதம் கிளிநொச்சி கனகாம்பிகைக் குளப்பகுதியில் இடம்பெற்ற திருட்டில் களவாடப்பட்ட சில நகைகளும் இருப்பதாக உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 5 பேரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு…

Read More

தர்மபுரம் வைத்தியசாலைக்கு முன்பாக ரிப்பர் கவிழ்ந்தது – படம் இணைப்பு

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதி தர்மபுரம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது. டிப்பர் கட்டுப்பாட்டையிழந்து பாலை மரத்துடன் மோதுண்டதுடன் வாய்க்காலுக்குள் பாய்ந்தது. வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார் என்று தெரிவிக்கப்பட்டது.

Read More

மட்டக்களப்பில் பற்றீஸ் இனுள் தங்க மோதிரம் மீட்பு – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல உணவக பேக்கரியில் இருந்து வாடிக்கையாளர் ஒருவரின் கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸில் இருந்து தங்கமோதிரம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை(18) குறித்த உணவக பேக்கரியில் கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸை வாடிக்கையாளர் சுவைக்க தயாரான நிலையில் குறித்த தங்க மோதிரம் ஒன்று இருந்ததை கண்டுள்ளார். மேலும் அத் தங்க மோதிரம் குறித்து உரியவர்கள் தங்களது ஆவணத்தை சமர்ப்பித்தால் அதை மீள வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை இரும்பு ஆணி என மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வாடிக்கையாளர் மீட்டுள்ள நிலையில் புதிதாக இத்தங்க மோதிரம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைபூட்டப்பட்ட நிலையில் இவ் உணவகத்தில் உணவருந்த சென்றவருக்குக்கே தங்கமோதிரம் பற்றிஸீனுள் கிடைத்துள்ளது.

Read More

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு இது தான் நடக்கும்

இறைவன் கொடுத்த இந்த உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது அந்த உயிரின் சொந்தக்காரருக்கும் பொருந்தும். ஆயினும் சிலர் தங்களுடைய வாழ்வின் முட்டாள்தனமான முடிவை இறுதியில் எடுத்து விடுகின்றனர். இதற்கு சாமனியனும், பிரபலங்களூம் விதிவிலக்கல்ல. நடிகர் ப்ரத்யுஸ்ஸா பானர்ஜியின் தற்கொலை நம்முன்னே முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றது. தற்கொலை செய்து கொண்ட பின் அந்த உடலை விட்டு, ஆன்மா வெளியேறி விடுகின்றது. அந்த ஆன்மாவிற்கு என்ன நேரிடுகின்றது?. தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவிற்கும், இயற்கையான முறையில் மரணமடைத்த ஆன்மாவிற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?. இறைவனின் இறுதித் தீர்ப்பு இரண்டு ஆன்மாவிற்கும் சமமானதா?. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு சுழற்சி தற்கொலை இயற்கையான மரணம் இல்லை. இந்த மரணம் இயற்கைக்கு மாறானதாகும். இது ஆன்மீகம் கூறிய வழிமுறைகளுக்கு எதிராகும். இவ்வுலகில் உள்ள பல்வேறு மதங்களில் மிகப்பெரிய பாவமாக…

Read More

தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் – இருவரும் பலியான சோகம் – உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி – மனதை உலுக்கும் சம்பவம்

அண்மையில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த சகோதரனும் அவரை அழைத்துச் செல்ல வந்த அவரின் தம்பியுமே இவ்வாறு உயிரிழந்திருந்தனர். செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் இருவரும் ரயிலில் மோதுண்டு அகால மரணமடைந்தனர். இந்நிலையில் செல்பி எடுக்க முயற்சித்து உயிரை பறிகொடுத்த சகோதரர்கள் பற்றி, அவர்களின் பாட்டி கண்ணீருடன் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், “ரயில் ஒன்று வருவதாக கூறி கடைசி மகனுக்கு நான் சத்தமிட்டேன். இதன்போது திடீரென சிறிய மகன் ரயில் வீதியில் பாய்ந்து அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்தார். வர வேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு மூத்த மகன் பாய்ந்த போது இருவரும் ரயிலில் மோதுண்டுள்ளனர். இராணுவத்தில் சேவை செய்து ஓய்வு பெற்ற கோப்ரலான 49 வயதுடைய பிரசந்த பிரியங்கர…

Read More