தின பலன் – 17 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் நீண்டநாளாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த பிரபலத்தை இன்று சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் ராசி ரிஷபம் வீண் விவாதங்கள் நீங்கும். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் ராசி மிதுனம் எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பழைய கடனை தீர்க்க…

Read More

மகனின் திருமணத்தில் நவீனாவின் உயிரைப் பறித்த காதலனின் அன்பு பரிசு..!

மதுரையைச் சேர்ந்த சிவா என்ற இளைஞன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வேலைக்காக interview சென்ற பொழுது, அங்கு தேவதையை போன்ற ஒரு பெண்ணைக் கண்டான். அந்த அழகிய பதுமையின் பெயர் நவீனா, இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.. இது நாளடைவில் காதலாக மாறியது. என்னடா இது பழைய கதை மாதிரி இருக்கேனு யோசிக்கிறீங்களா? முழுவதும் படிங்க… அப்புறம் தெரியும். இருவரும் நீண்ட நாட்களாக உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர்…. காதலிக்கும் நேரத்தில் நவீனா காதலனிடம் அடிக்கடி என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது… பத்திரமாக பார்த்துக்கொள் சிவா என்றுக் கூறிக்கொண்டே இருப்பாள். திடீரென்று, சிவாவிற்கு வேறு இடத்தில் வேலை கிடைக்க அவன் அந்த நிறுவனத்தை விட்டு சென்று விட்டான். இருந்த போதிலும், அவள் மீது வைத்திருந்த…

Read More

நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றால் வடக்கின் கொந்தளிப்பு அடங்கும்! விக்னேஸ்வரன்

ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என சமயத் தலைவர்களிடம் கூறியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண நிலவரம் குறித்து அங்குள்ள சமயத் தலைவர்களுக்கு விளக்கமளித்ததாக முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என ஆதினம் தம்மிடம் வினவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவை மீளப் பெற்றால், கொந்தளிப்பு தாமாகவே நிறுத்தப்படும் என ஆதினத்திடம் தான் குறிபட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

பேஸ்புக்கில் மைத்திரியின் புகைப்படத்தை கவனமாக கையாளவும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புகைப்படங்களை சேதப்படுத்தி வெளியிடப்பட்டால், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் பேஸ்புக் பக்கங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்கள் பதிவிடப்படுவதனால் அவை முடக்கப்படாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பக்கங்களில் விமர்சனமிக்க பதிவுகளில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படாதென ஜனாதிபதி ஊடக பிரிவு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் பல புகைப்படங்கள் பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமையை ஜனாதிபதி ஊடக பிரிவு பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதியின் புகைப்படங்களை சேதப்படுத்தி அவமதிக்கும் வகையிலான பதிவு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் ஊடக பிரிவினால் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அரச தலைவர் என்பதனால் பேஸ்புக் வலைத்தளங்களில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர்…

Read More

தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார். ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு மாறிய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்திருந்தனர். இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன்போதே, வடமாகாண…

Read More

தண்டவாளத்தில் நடந்தால் இனி சிறை

கடந்த சில தினங்களாக இடம்பெறுகின்ற விபத்துகளை கருத்தில் கொண்டு, ரயில் கடவையில் பயணிப்பதை தடைசெய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 1864 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் ரயில் திணைக்கள யாப்பில் இருக்கின்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை பஸ்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்

முதியோருக்கு அபயமளிக்கும் விழிப்புணர்வுத் திட்டம் அமைச்சா் எஸ்.பி திசாநாயக்கவினால் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று (16) கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வின்போது, முதியவர்களுக்கு அபயமளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவி செய்வது தொடர்பிலான ஸ்டிக்கா்கள், பஸ்களில் ஒட்டப்பட்டன. சமுகவலுவுட்டல் மற்றும் நலன்போக்கு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் குறித்த திட்டத்திற்கு அமைய, இவ்விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஸ்டிக்கர்களில், 24 மணி நேரமும் இயங்கும் குறித்த சேவை தொடர்பில், 118, 011-3094543, 011-30945444 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வைபவத்தில் முதியோர் சங்கங்களின் உறுப்பினகளும் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ்ப்பாணத்தில் களத்தில் விசேட அதிரடிப்படை வீரர்கள் – படங்கள் இணைப்பு

யாழில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில்.ஈடுபட்டுள்ளனர்.. கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து யாழில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக யாழ் நகரில் பொலீஸ் விசேட அதிரடி படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

விக்கி – சம்பந்தன் பேச்சுவார்த்தை தோல்வி – முதலமைச்சரை நீக்குவதில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உறுதி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் தமிழரசு கட்சியின் நடவடிக்கை தொடர்ந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்தனர். இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், பிரச்சினை குறித்து இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் அதனை…

Read More

17 வயது சிறுவனுடன் திருமணமான 26 வயது பெண் ஓட்டம்

17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (33), இவருடைய மனைவி முத்துமாரி (26) இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சங்கர் தனது வேலை விடயமாக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி சொந்த ஊருக்கு திரும்பிய சங்கர் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சங்கர் பொலிசில் புகார் அளிக்க, பொலிசார் நடத்திய விசாரணையில், முத்துமாரி அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. சங்கர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் முத்துமாரிக்கும், சிறுவனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனிடையில் முத்துமாரி, தன்னுடைய குழந்தையுடன் மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து…

Read More