இலங்கையில் செல்பி எடுப்போரை கைதுசெய்ய பொலீசார் தயார் நிலையில்

ரயில் பாதைக்கு அருகில் செல்ஃபி படங்களை பிடிப்போரை கைது செய்ய தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே நடவடிக்கை முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அண்மையில் ரயில் பாதைக்கு அருகில் செல்ஃபி படம் பிடித்த 25 வயதான இளைஞனும் 12 வயதான சிறுவனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஓடும் ரயிலுக்கு அருகில் இருந்து செல்ஃபி எடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதனால், பலர் விபத்துக்குள்ளாவதாகவும் சமரசிங்க கூறியுள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் உலகம் முழுவதும் செல்ஃபி எடுக்க முயற்சித்த 127 பேர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

Comments

comments

Related posts