அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நடிகையின் இரகசியம் வெளியானது

நடிகை க்ரித்திகா சவுத்ரி மும்பையில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை யாரோ தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து க்ரித்திகாவின் தோழி ஒருவர் கூறியிருப்பதாவது,

க்ரித்திகா டெல்லியில் வேலை செய்தபோது தன்னுடன் பணியாற்றிய ஒருவரை காதலித்தார். அவர்கள் திருமணம் செய்ய தீர்மானித்தபோது தான் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமானது க்ரித்திகாவுக்கு தெரிய வந்தது.

அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு க்ரித்திகாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பைக்கு வந்தனர். அந்த நபர் க்ரித்திகாவுக்கு துரோகம் செய்தார்.

க்ரித்திகா தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு நான் மாடலிங் வேலை கொடுத்தேன். அவர் போதைப் பொருளுக்கு அடிமையானதை கண்டுபிடித்தேன்.

போதைப் பொருள் பயன்படுத்தாதே அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது இல்லை என்று நான் க்ரித்திகாவை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. போதைப் பொருள் இல்லாமல் அவரால் இருக்க முடியாது.

க்ரித்திகா பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது இடது கையில் பிளேடால் கீரிய அடையாளம் நிறைய இருக்கும். அவர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாரா என தெரியவில்லை.

நான் தற்போது டெல்லியில் வசித்து வருகிறேன். க்ரித்திகாவுடன் பேசி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. போலீசார் என் வீட்டை தேடி வந்தபோது தான் க்ரித்திகாவின் விவகாரம் தெரிய வந்தது என்றார் அந்த தோழி.

Comments

comments

Related posts