தின பலன் – 16 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் ராசி ரிஷபம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் ராசி மிதுனம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2…

Read More

மகள் வயது பெண்ணுடன் டேட்டிங் செய்யும் நடிகர்: வெளியானது நெருக்கமான புகைப்படங்கள்

யாருக்கு வயது ஆனாலும் நடிகர், நடிகைகளுக்கு வயது ஆகாது, அதுபோன்று இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் வயது வரம்பு இருக்காது. இருமடங்கு வயது மூத்தவர்கள் மீது கூட காதல் வரும், 60 வயதுக்கு மேல் கூட இளம் வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொள்வார்கள். இதுபோன்ற திருமணத்திற்கு இவர்கள் கூறும் காரணம், இருவரின் எண்ணங்களும் ஒத்துப்போவதால் திருமணம் செய்துகொண்டோம் என்பதுதான். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரை இதுபோன்ற வயது மீறிய காதல் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் கூட 60 வயதான இயக்குநர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னைவிட வயது சிறியவரான இளம் வயது நடிகை ஷெர்லியை திருமணம் செய்து கொண்டார். இதே போன்று பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் கஷ்யப் தனது மகள் வயதுடைய பெண்ணுடன் டேட்டிங் செய்து வருகிறார். இருவரின் நெருக்கமான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன,…

Read More

இலங்கையில் செல்பி எடுப்போரை கைதுசெய்ய பொலீசார் தயார் நிலையில்

ரயில் பாதைக்கு அருகில் செல்ஃபி படங்களை பிடிப்போரை கைது செய்ய தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே நடவடிக்கை முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் அண்மையில் ரயில் பாதைக்கு அருகில் செல்ஃபி படம் பிடித்த 25 வயதான இளைஞனும் 12 வயதான சிறுவனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஓடும் ரயிலுக்கு அருகில் இருந்து செல்ஃபி எடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதனால், பலர் விபத்துக்குள்ளாவதாகவும் சமரசிங்க கூறியுள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் உலகம் முழுவதும் செல்ஃபி எடுக்க முயற்சித்த 127 பேர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

Read More

முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு பூரண ஆதரவு! யாருக்கும் பயப்படப்போவதில்லை : அடைக்கலநாதன்

முதலமைச்சருடைய செயற்பாடு வரவேற்கத்தக்கது, அந்த தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றோம். மறைமுகமாக செயற்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் உயர்மட்ட உறுப்பினர்களின் அரசியல் குழு கூட்டம் இன்று காலை 10.00 மணி தொடக்கம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவசரமாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு இன்று கூடுவதன் நோக்கம் வட மாகாண சபையிலே ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை சம்பந்தமாக ஆராய்வதற்காக 2 மணிக்கு நடைபெற இருக்கின்றது. நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் ஊழல் அமைச்சர்கள் பதவி விலகி கொள்ள வேண்டும் என்ற முடிவை மாகாண சபையிலே அறிவித்திருக்கின்றார். இந்த…

Read More

வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றுவதை தடுக்க அணி திரளுமாறு அழைப்பு

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரின் கொள்கைகளை அகற்றுவதற்கு தமிழரசு கட்சி ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறது. திருடர்களை காப்பாற்றுவதற்கு தமிழரசு கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. திருடர்களின் குகையாக தமிழரசுக்கட்சி மாறியுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கொள்கைப்பற்று பாதையை தோற்கடிப்பதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கம் மற்றும் தமிழ்…

Read More

ரிஷபம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

உறவினர்களை ஆதரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே! உங்களின் ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். விரயாதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். எனவே விரயம் ஒரு பக்கம் ஏற்பட்டாலும், அதற்கேற்ற வகையில் தன வரவும் தாராளமாக வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். தடம் மாறிச் சென்ற உறவினர்கள் தானாக வந்திணைவர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். சுக்ர பலத்தால் அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயண ஸ்தானம் பலமாகக் காணப்படுவதால், இதுநாள் வரை வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சித்து வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடும். அதே நேரத்தில் உங்கள் ராசியைச்…

Read More

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்சியான தகவல் கூறியுள்ள அமைச்சர்

வட மாகாண இளைஞர்களின் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருளாதார மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதற்கமைய வவுனியா, மாங்குளம் பகுதியில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார மையம் உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று கட்டத்தின் கீழ் பொருளாதார மையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முழுமையான நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் அதன் ஊடாக 5000 தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என அவரது அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முதலீட்டு மையத்தில் முதலீடு செய்வதற்காக இதுவரையில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

யாழ்ப்பாண இளைஞர்களின் பேஸ்புக் புரொபைல் படமாக பிரபலமாகி வரும் விக்கி ஆதரவு புகைப்படம்

வடமாகாண சபை உறுப்பினர்களால், முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான கோரிக்கை, ஆளுனரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண இளைஞர்களின் பேஸ்புக் புரொபைல் படமாக standWithCM கேஸ்டேக் இடப்பட்ட புகைப்படம் பிரபலமாகி வருகின்றது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய செய்திகள் விக்னேஸ்வரனின் கழுத்து இறுகியது – முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சையும் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி…

Read More

மேஷம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

வீரமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற மேஷ ராசி அன்பர்களே! ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் கூடி சஞ்சரிக்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதனுடனும், பஞ்சம ஸ்தானாதிபதி சூரியனுடனும் செவ்வாய் இணைந்திருப்பதால் இம்மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளி வழங்கும் மாதமாகவே அமையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பற்றாக்குறை மாறும். வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே, அஷ்டமத்துச் சனியால் அதிகப் பிரயாசை எடுத்தும் காரியங்கள் முடிவடையாமல் இருக்கிறதே என்றெல்லாம் கலங்கியவர்களின், மனக் கவலையைப் போக்கும் விதத்தில் இந்த மாதத்தின் கிரக நிலைகள் சஞ்சரிக்கின்றன. உங்கள் ராசிக்கு 2,7-க்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்…

Read More

கே.கே.ஸ் வீதி கொக்குவில் சந்திக்கு அருகில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் இது

யாழ்ப்பாணம் கே.கே.ஸ் வீதி கொக்குவில் சந்திக்கு அருகில் உள்ள இரும்புக்கடை உட்பட மூன்று கடைகள் இன்று மதியம் 2 மணியளவில் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வாள்களடன் வந்த மூவர் அடங்கிய கும்பல் குறித்த கடையினை தாக்கிவிட்டு ஒரு தொகை பணத்தினையும் திருடிச்சென்றுள்ளனர். மதிய நேரம் என்பதனால் கடையில் பணிபுரிபவர்கள் மதிய உணவுக்கு சென்றவேளையே இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. கடையின் முன்பகுதியில் பொருத்தப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாண மேலதிக விசாரனைகளை யாழ் பொலிஸார் கடையில் பொருத்தப்பட்டுள்ள காண்கணிப்பு கமெராவின் உதவியோடு மேற்க்கொண்டு வருகின்றனர்.

Read More