பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கட்டார் அழைப்பு

வளைகுடா நாடுகளின் இராஜதந்திர பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.

பரிஸுக்கு விஜயம் செய்துள்ள கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani) செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத குழுக்களுக்கு கட்டார் ஆதரவளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தெளிவான அடித்தளங்களின் அப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண குவைத் முன்னெடுக்கும் மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், கலந்துரையாடலின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதே தமது தெரிவு என்றும் கட்டார் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts