தின பலன் – 15 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி ரிஷபம் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் ராசி மிதுனம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில்…

Read More

எச்சரிக்கை! இனி கொழும்பில் குப்பை போட்டால் சிறை

கொழும்பின் நகர எல்லைக்குள் கொழும்பு நகர சபை, இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சோதனை நடவடிக்கையை நாளை இரவு முதல் அமுல்படுத்தபடவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அனுர தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சுற்றுச் சூழலை மாசடைய செய்பவர்களை கைது செய்வதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள வீதிகளில் குப்பைகளை கொட்டிய பலர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிப்பட்ட சந்திரிக்கா அம்மையாரின் சமத்துவம்

தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் தமிழ் மொழியில் வகுப்புகளை நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அதிகளவில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். காலி, மாபலகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Read More

வடக்கு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தன்னிச்சை முடிவுக்கு பதிலடி

வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கி, மேலும் இரு அமைச்சர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டதன் எதிரொலியாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் பிரதான அங்கத்துவகட்சி ஒன்றின் அலுவலகத்தில் பேச்சு நடந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் தருகையில், வடமாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் 4 பேர் மீதும் நடவடிக்i க எடுத்ததன் எதிரொலியாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுமார் 20 உறுப்பினர்கள் வரை ஆதரவு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இன்று இரவே இந்த தீர்மானத்தை எடுத்து இன்று இரவே வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளித்து ஆளுநர் நாளை வெளியிடும் வகையில் இந்த…

Read More

விக்னேஸ்வரனின் கழுத்து இறுகியது – முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானம்

வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சையும் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சீ.வி.கே.சிவஞானம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபையின் ஏனைய பொறுப்புக்களின் புதிய நியமனம் தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படாத நிலையில் முதலமைச்சரை மாற்றுவது தொடர்பில்…

Read More

இன்றும் தொடர்கிறது – ஒரு மிஸ் கோலால் பல ஆயிரங்களை இழந்துள்ள பல இலங்கையர்கள் – ஆதாரம் இணைப்பு

இலங்கையில் வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு (மிஸ்ட்கோல்) கிடைத்து அதன் மூலம் ஆயிரக் கணக்கில் பணம் பறிபோகும் நிலை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொலைபேசி அழைப்பை ‘One Ring’ Scam என அழைப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் இது குழுவாக இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். தவறிய இலக்கத்திற்கு மீண்டும் அழைப்பு மேற்கொண்டவுடன் வெளிநாட்டு தொலைபேசி கட்டணம் உட்பட பணம் செலுத்தி பெற்று கொள்ள வேண்டிய பல்வேறு சேவைகள் தானாகவே இயங்க ஆரம்பித்து விடும். அதன் பின்னர் நுட்பமான முறையில் தொலைபேசி கட்டணம் அறவிட்படும். இதில் ஒரு முறைக்கு 20 டொலர் வரையில் அறவிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. எனவே அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் கிடைக்கும் தவறிய அழைப்புகளுக்கு மீண்டும் அழைப்பதனை தவிர்க்குமாறு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

இந்த 4ல ஒரு படம் செலக்ட் பண்ணுங்க… உங்க பர்சனல் சீக்ரெட் என்னனு நாங்க சொல்றோம்!

இது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில் கீழே உள்ள் 4 படங்களில் ஒன்றை தெரிவுசெய்து கொள்ளுங்கள். என்ன தெரிவு செய்துவிட்டீர்களா? வாருங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிந்துகொள்ளலாம். படம் #1 இந்த படத்தை 20% பேர் தேர்வு செய்திருந்தனர். இவர்கள் மிகவும் ஸ்பெஷலானவர்கள். இந்த படத்தில் நிலா வலது பக்கம் பார்த்திருக்கும், கடல் அமைதியாக சீற்றமின்றி இருக்கும். இது இந்த படத்தை தேர்வு செய்த நபரின் ஆசைகள் மற்றும் உருவாக்கம் எல்லை அற்றது என்பதை காண்பிக்கிறது. தனித்தன்மை! தாங்கள் அதிகமாக கனவு காண்கிறோம் என்பதையே இவர்கள் குறைவாக தான் அறிந்திருப்பர். இவர்களது கனவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் மகத்தானதாக, உயர்வாக…

Read More

ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – டெனீஸ்வரன், சத்தியலிங்கம் விடுமுறையில் செல்லவேண்டும்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி “வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இருவரும் நாளை மதியத்திற்குள் தாமாகவே பதவி விலகக் கோருகின்றேன்”. என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்துள்ளார். மேலும், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இருவர் மீதும் விசாரணைகள் நடத்தப்படும். அதுவரை விடுமுறையில் செல்ல வேண்டும், இவர்கள் தங்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி ஓய்வில் இருக்கவேண்டும், அவர்களின் அமைச்சு பொறுப்புக்களை நான் பார்த்துக் கொள்வேன் எனவும் முதலமைச்சர்…

Read More

தன் மீதான குற்றத்துக்கு ஐங்கரநேசனின் தன்னிலை விளக்கம் இது

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. வடமாகாண சபையின் 96ஆவது சிறப்பு அமர்வு, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியுள்ளது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன்படி வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமது நிலைப்பாட்டை கூறுவதற்கு இன்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தை தெரிவித்துள்ளார். “நீதிக்கு புறம்பாக விசாரணைக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. முதலமைச்சர், விவசாய அமைச்சிலிருந்து வெளியேறுமாறு கேட்டால் வெளியேறுவேன். விசாரணைக் குழுவின் நம்பகத் தன்மையிலும், நடுநிலையிலும் சந்தேகம் உள்ளது” எனவும்,…

Read More

இலங்கையில் நஞ்சு தடவப்பட்ட இலவச பாட நூல்கள்

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மான குறித்த புவி­யியல் புத்­த­கங்­களை மீளப்­பெ­று­வ­தற்கு ஜனா­தி­பதி விரை­வான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அச்­சங்­கத்தின் பிரதிச் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அளுத்கே தெரி­வித்தார். தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்­காக தற்­போது வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­த­கங்கள் விஷ இர­சா­ய­னத்­தினாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. குறித்த காகி­கத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ள­மையால் மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்தில் பாரிய பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும். குறித்த விஷ இர­சா­ய­னத்­தி­னா­லான…

Read More