தின பலன் – 14 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி ரிஷபம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு ராசி மிதுனம் சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள்….

Read More

வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட 23 வயது க்ரிதிக்கா

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் க்ரிதிக்கா சவுத்ரி(23). பாலிவுட் நடிகையாக ஆசைப்பட்டு மும்பை வந்து வீடு எடுத்து தங்கியிருந்தார். கங்கனா ரனாவத் நடித்த ரஜ்ஜோ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் க்ரித்திகா. ரஜ்ஜோ படம் மட்டும் இன்றி பாலாஜி ப்ரொடக்ஷன் டிவி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். நடிப்பு தவிர மாடலிங்கும் செய்து வந்தார். பாலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. க்ரித்திகா மும்பையில் அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்தார். அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். க்ரித்திகாவின் வீட்டுக் கதவு வெளியே இருந்து பூட்டியிருந்தது. போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது க்ரித்திகா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. க்ரித்திகா இறந்து 3 முதல் 4 நாட்களாகியுள்ளது என்றும், அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்றும்…

Read More

வெட்கமா இல்ல, போய் டிரஸ் போட்டுட்டு வாங்க அமலா பால்

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலா பாலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். முன்பு ஒரு முறை மாடர்ன் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர். இந்நிலையில் அவர் கருப்பு நிற சட்டை அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். எனக்கு வெளியே உள்ள தீயை விட என்னுள் உள்ள தீ பிரகாசமாக எரிந்ததால் பிழைத்தேன் என்று கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால். அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள். அதனால தான் உங்கள பாக்குறவங்க சூடாகிடுறாங்களா…..? போ போ போய் டிரெஸ் பண்ணிட்டு வா…. என பரவலாக comment இல் கலாய்த்து வருகிறார்கள்

Read More

பொகவந்தலாவை 22 வயது கர்பிணிப் பெண்ணுக்கு மாமியார் வடிவில் வந்த கொடுமை

பொகவந்தலாவை பிரதேசத்தில் நான்கு மாத கர்ப்பிணி தாயொருவரை அவரது மாமியார் தீயில் சுட்டு கொடுமை படுத்தி வந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை – பெட்ரோசோ தோட்டத்தின் பீடிலன் பிரிவை சேர்ந்த லெச்சமன் விஜேமணி என்ற 22 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண் இன்று மதியம் பொகவந்தலாவை சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கிளினிக் வந்துள்ளார். இதன் போது குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் தீக் காயங்கள் இருப்பதை அவதானித்த சுகாதார மருத்துவ அதிகாரி இது தொடர்பில் குறித்த பெண்ணிடம் வினவியுள்ளார். தனது மாமியார் தன்னை கொடுமை படுத்துவதாகவும் , அவர் நெருப்புக் கட்டையால் தன்னை இவ்வாறு தீக்காயங்களுக்கு உட்படுத்தியதாகவும் குறித்த பெண் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உடன் செயற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி , குறித்த பெண்ணை பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் ,…

Read More

இனவாதிகளை அடக்க களமிறக்கப்பட்டுள்ள விஷேட அதிரடிப்படை

நாட்டில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிரடி படையினர் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கும் இனவாத செயற்பாடுகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு, உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு உட்பட தெரிவு செய்யப்பட்ட ஏனைய மாவட்டங்களில், மோட்டார் சைக்கிள் குழு, நடமாடும் சேவை, அவசர வீதி நடவடிக்கைகள் என்பனவற்றை பொலிஸ் விசேட அதிரடி படை அதிகாரிகளினால் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஆயுதம் ஏந்திய பொலிஸ் விசேட அதிரடிபடை குழு, தங்கள் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பொலிஸ் விசேட அதிரடிபடையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் நேரடி கண்கானிப்பின்…

Read More

யாழில் மைத்திரிக்கு ஒரு லட்சம் வழங்கிய அகிலதாஸ்

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வட மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த மக்கள் தொடர்பாடல் மனிதாபிமான ரயில் செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், ஒரு இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இவர் கையளித்தார்.

Read More

முஸ்லீம் மக்களுக்கு மஸ்தான் எம்.பி இன் வேண்டுகோள்

நாட்டில் முஸ்லிம்களுடைய மதஸ்த் தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.மஸ்தான் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, மேலும் சமூக ஊடகங்களூடாக இனவாதத்தை தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள், தகவல்கள் என்பனவற்றை பகிர்வதையும் பதிவு செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் இந்த புனிதனமான றமழான் மாதத்தில் பொறுமையை கடைப்பிடித்து இறைவனிடம் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு சரியான தண்டனை கிடைக்கை பிரார்த்தனைகள் செய்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக சில மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகின்றனர் என்னைப்பொறுத்தவரியில் அது தவறு என்றே கருதுகின்றேன் ஏனெனில் இப்பொழுது நாம்…

Read More

மீள்குடியேற்ற அமைச்சரின் நொண்டிச் சாட்டுக்கு செக்-மேட் வைத்த சிறீதரன் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்வியினால் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாயடைத்துப் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியிருந்தார். இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, குறித்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் “இரணைதீவில் கடற்படையினரின் ரேடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கதிரியக்க பாதிப்புகள் ஏற்படும். எனவே, அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் மீள்குடியமர்த்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக” அவர் கூறியிருந்தார்….

Read More

கைகோர்க்கும் ரஷ்யா – வடகொரியா?

சக்தி வாய்ந்த நாடாக ரஷ்யாவை உருவாக்குங்கள் என்று ரஷ்யாவின் தேசிய தினத்தில் புதினுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய தினம் ஜூன் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுக்கு வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ரஷ்ய மக்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ரஷ்யாவை சக்தி வாய்ந்த நாடாக அதிபர் புதின் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கிடையான உறவை பலப்படுத்தும் நோக்கில்தான் இந்த வாழ்த்துச் செய்தியை கிம் ரஷ்ய அதிபர் புதினுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More

பலாப்பழ பிரியரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை இது

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன. எச்சரிக்கைகள் * பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். * இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும். * பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். *எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும். * பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும். * குடல்வால் அழற்சி…

Read More