சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றல் முடிவு தேதி வரும் வியாழனன்று

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை குறித்த விண்ணப்பங்களை ஏற்றுகொள்வது எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலையின் அதிபர் ஊடகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த இந்த விண்ணப்பம் ஏற்று கொள்ளல், ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts