யாழ்ப்பாண ரயிலின் முன் செல்பி எடுத்த இளம் தம்பதி

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயிலில் தம்பதி ஒன்று மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 26 வயதான கணவன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான மனைவி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட – கஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டிருந்த தம்பதியே அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்

Read More

தமிழர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதியால் முப் படைகளுக்கும் விடுக்கப்படவுள்ள கட்டளை

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார். யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் போனோரின் உறவுகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த சந்திப்பின் போது, காணாமல் போனோரின் உறவுகள் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். மறைமுகமான தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் உட்பட தமிழ் உறவுகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். போன்ற 3 கோரிக்கைகளை முன்வைத்து 114 நாட்களாக தங்களது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதாகவும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். மகஜரில் இருந்த விடயங்களை தன்னால் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததுடன், நாளை தேசிய பாதுகாப்பு…

Read More

யாழ்ப்பாணத்தில் ஓட்டோவினுள் இளம் குடும்பஸ்தரும், யுவதியும் சில்மிஷம்! – படம் இணைப்பு

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும், யுவதி ஒருவரும் பட்டப்பகல் வேளையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப் பகுதி இளைஞர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை(12)பிற்பகல்-01 மணியளவில் யாழ். செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். செம்மணி வீதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றுக்குள் இளம் குடும்பஸ்தரொருவரும், யுவதியொருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் தீவுப் பகுதியொன்றில் தனியார் பேருந்து நேரக் கணிப்பாளராக இருந்து வருவதுடன் ஏற்கனவே திருமணமானவர் எனவும்தெரிய வருகிறது. குறித்த இருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த முச்சக்கர வண்டியின் திறப்பு இரு இளைஞர்களாலும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இருவரும் தமக்கு ஒரு தடவை மன்னிப்பு வழங்குமாறு கெஞ்சி…

Read More

தின பலன் – 13 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு ராசி ரிஷபம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை ராசி மிதுனம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக் கூடும். யாருக்காகவும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன்…

Read More

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றல் முடிவு தேதி வரும் வியாழனன்று

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை குறித்த விண்ணப்பங்களை ஏற்றுகொள்வது எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலையின் அதிபர் ஊடகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த இந்த விண்ணப்பம் ஏற்று கொள்ளல், ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று நள்ளிரவு தொடக்கம் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பிரதான அஞ்சல் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அஞ்சல் திணைக்கள நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரியும் அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். தமது பேராட்டத்திற்கு சுமார் 21 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்குகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு தொடக்கம் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதனிடையே, தமது பிரச்சினைக்கு உடன் தீர்வு கிடைக்காவிடில் எதிர்வரும் 26ஆம் திகதி பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சிந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Read More

ஞானசார வை மறைத்து வைத்திருப்பவர் சம்பிக்க ரணவக்கவே

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மறைத்து வைத்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முக்கிய அரசியல்வாதி ஒருவர் இந்த பிக்குவை மறைத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் மறைத்துள்ள அரசியல்வாதி யார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால், இந்த உண்மையை வெளியிட நேர்ந்தது. ஞானசார தேரருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. இந்த பிக்கு முதலில் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்தவர். அத்துடன் 2014 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமயவின் வேட்பாளராக அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். மேலும் தற்போது ஜாதிக ஹெல…

Read More

பலாத்காரம் செய்ய வந்தவர்களை நூதனமாக மாட்டிவிட்ட பலாங்கொடை பெண்

யுவதி ஒருவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த மூன்று இளைஞர்களை தந்திரமான முறையில் சட்டத்தின் பிடியில் வைத்த சம்பவம் ஒன்று பலாங்கொடை பிரதேசத்தில் நடந்துள்ளது. 26 வயதான யுவதி ஒருவர் கஷ்டப் பிரதேசம் ஒன்றில் இருந்து வந்து விடுதியில் தங்கி பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை தொழில் புரிந்து வருகிறார். யுவதி பணி முடிந்து இரவு 7 மணியளில் தனது தங்குமிடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இளைஞர்கள், யுவதியை பலவந்தமாக வண்டியில் ஏற்றி பம்பகின்ன பிரதேசத்தில் உள்ள குறுக்கு வீதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை பறித்துள்ளனர். இறுதியில் யுவதியை தாம் வல்லுறவுக்கு உட்படுத்த போவதாக கூறியுள்ளனர். அதனை செய்ய வேண்டாம் எனக் கூறிய யுவதி, மூவருடன் தனித்தனியாக நெருங்கி பழகுவதாக கூறி…

Read More

கதிர்காம யாத்திரையில் இணைந்து பயணிக்கும் அதிசய நாய்

கதிர்காமம் முருகன் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருடன் நாய் ஒன்றும் பயணிக்கின்றது. கடந்த பத்து தினங்களாக குறித்த நாய் யாத்திரிகளுடன் பயணிக்கின்றது. இந்நிலையில், குறித்த நாய்க்கு பக்தர்கள் திலகமிட்டு, பட்டு சாத்தியுள்ளனர். குறித்த நாய் இடைநடுவில் திரும்பி சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது தொடர்ந்து முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் வரையில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

விலைக்கு வாங்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்: வெளியான வீடியோ ஆதாரங்கள்

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்கப்பட்டதாக Times Now பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள பேரம் பேசப்பட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியது உண்மை தான் என தனது புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய சட்டமன்ற உறுப்பினர்களான சரவணன் மற்றும் ஜி.கனகராஜ் ஆகிய இருவரும் இந்த மாபெரும் ஊழலை செய்தது உண்மை என வாக்குமூலம் அளித்துள்ளதாக Times Now செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

Read More