தின பலன் – 12 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்-. சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை ராசி ரிஷபம் மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை ராசி மிதுனம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்….

Read More

பாலியல் அடிமையாக கண்டெய்னரில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு – வீடியோ இணைப்பு

பாலியல் அடிமையாக கண்டெய்னரில் இரும்புச் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. காலா ப்ரவுன் என்ற தெற்கு கரோலினாவை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சீரியல் சைக்கோ கொலையாளி ஒருவனால் கடத்தப்பட்டு கன்டெய்னர் பெட்டி ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்து தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்டு வந்துள்ளாள். பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கன்டெய்னரை உடைத்து காப்பாற்றப்பட்டுள்ளாள். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்

Read More

யாழ்ப்பாணம் நெல்லியட்டியில் ஆணின் சடலம் மீட்பு

வடமராட்சி, கரணவாய் மண்டான் காட்டுப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உச்சில் வீதி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த பாலசுந்தரம் (வயது-60) எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்குறித்த நபர் பத்து தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும் நேற்றைய தினம் அப் பகுதியில் சடலமாக காணப்பட்ட தாகவும் பொலிஸார் கூறினர். சடலம் பழுதடைந்துள்ளமையால் இவர் எட்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்காலம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர். சடலத்தின் அருகில் நச்சுப் போத்தல் ஒன்றும் காணப்பட்டிருந்த நிலையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read More

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய இருவர் கைது

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி, காயம் ஏற்படுத்திய இரண்டு நபர்களை சூரியவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சூரியவெவ பொலிஸ் மைதானத்தில் பொசன் வாரத்திற்காக இடம்பெற்ற நிகழ்விற்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தடுப்பதற்காக அந்த இடத்திற்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை குறித்த சந்தேக நபர்கள் தாக்கியுள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சூரியவெவ – விஹாரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள், தற்போது ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read More

ஜூலை முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

பேருந்து கட்டணங்கள் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த விடயத்தை இன்று பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் 6.5 சதவீதமாக பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாடசாலை ஆசிரியர்கள் வேலை நேரத்தில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் – குருகுலராசா

வேலை நேரத்தில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தாதீர்கள் என வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வவுனியா புளியங்குளத்தில் அலுவலர் விடுதியை திறந்து வைத்த பின்னர், வவுனியா வடக்கு வலய அதிபர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியாத நிலையில் இருக்கும் ஆசியர்களை அனைத்து பாடங்களுக்கும் உரிய வகையில் பயன்படுத்தவேண்டும். அவர்கள் பயிற்சி பெற்றிருப்பின் அதனை செய்ய கூடியவகையில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். அத்துடன் பாடசாலைகளில் தண்ணீர் இல்லை என்றால் 500 மீற்றர் சென்று தண்ணீர் எடுத்துவருவதற்கு நாங்கள் என்ன செய்வது. வலயக் கல்விப்பணிப்பாளருடன் கலந்துரையாடி ஒருவரை தண்ணீர் எடுக்க அனுப்பி அதற்கு கொடுப்பனவை கொடுக்க மாற்று வழிகளை தேடவேண்டும். குறிப்பாக வடக்கு கல்வி நிலை பின்தங்கியதற்கு போரியல் தாக்கமே முக்கிய காரணம். அதற்கு கல்வியியலாளர்கள் ஆய்வு…

Read More

கிளிநொச்சியில் ஆயுதமுனையில் கொள்ளை – படங்கள் இணைப்பு

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் கல்லாறு பகுதியில் இன்று (11) இடம்பெற்றுள்ளது. கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர். குறித்த பாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர். அயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள…

Read More

பொதுபலசேனா வின் முகத்திரை கிழிந்தது

நுகேகொட, மஹரகம பகுதிகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கிய நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ்மா அதிபர் இதை தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக மஹரகம தொடக்கம் நுகேகொடை வரையான பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் நான்கு தீக்கிரையாகி அழிந்து போயிருந்தன. இது தொடர்பில் அண்மையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், குறித்த நபரும் அதை ஒப்புக்கொண்டிருந்தார். எனினும் தற்போது குறித்த நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

கொழும்பு வாசிகளுக்கு ஓர் எச்சரிக்கை

கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களின் வாகனங்களுக்கான வீதி விதிகள் நாளை முதல் கடுமையாக செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்காக பொலிஸ் தலைமையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு, பொலிஸ் நடமாடும் சேவை, பொலிஸ் சீ.சீ.டீ.வி கமரா மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஊடாக இந்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேடமாக காலி வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதான வீதி மற்றும் வாகனங்கள் கொழும்பிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் இந்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் லியனகே தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் புதன் கிழமை (14) இடம்பெறவுள்ளது. மேலும், கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தொழில் தொடர்பில் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் லியனகே குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமையவே தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக ஊடகம் ஒன்றுக்கு லியனகே தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 0097455564936 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தன்னை தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

Read More