விளையாட்டு அமைச்சரை விட நாட்டுக்கு சேவை செய்துள்ளேன் – சுசந்திகா ஜெயசிங்கே

விளையாட்டுத் துறை அமைச்சரை விடவும் தான் நாட்டிற்காக அதிக சேவைகளை செய்த ஒருவர் என்று ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளாார்.

ஒலிம்பிக் வீரர் ஒருவர் மூலம் நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய சேவையையும் ஒலிம்பிக் பதக்கத்தின் பெறுமதியையும் தன்னால் தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் கூறினார்.

தற்போது சுமார் 25 கோடி வரையில் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றிற்கு கேள்வி இருப்பதாகவும், எனினும் அதனை விற்பதற்கு தற்போது அவசரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

வரும் நாட்களில் அழைப்பு விடுக்கப்பட்டாலும் தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரின் கீழ் செயற்பட தயாரில்லை என்றும், அமைச்சர் தொடர்பில் தனக்கு திருப்தி இல்லை என்றும், புரிந்துணர்வின்றி செயற்படுவதற்கு முடியாதென்றும் சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளாார்.

எவ்வாறாயினும் தனது செலவினங்களுக்காக வருங்காலத்தில் தனியார் துறையில் தொழில் ஒன்றை செய்யும் எண்ணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒலிம்பிக் பதக்கங்களை விற்பனை செய்ய முடியாதவாறு சட்டம் கொண்டு வருவதாக விளையாட்டு அமைச்சர் கூறியதன் மூலம் அவரின் அறிவின்மை தௌிவாகின்றதி என்றும், உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் பதக்கம் உரிமையாவது வீர, வீராங்கனைகளுக்கே என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் தனது பதக்கத்தை விற்பனை செய்யப் போவதாக கூறிய போது, விளையாட்டுத் துறை அமைச்சரைத் தவிர ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது ஏனைய கட்சித் தலைவர்களோ எதுவித கருத்தும் தெரிவிக்காததன் காரணம் அவர்கள் அது தொடர்பில் அறிந்திருப்பதே என்றும், இது தொடர்பில் விளையாட்டு அமைச்சருக்கு அறிவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது அறிவித்தலின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தொடர்பு கொண்டு தனது பிரச்சினை குறித்து பேசியதாகவும், ரஞ்சன் ராமநாயக்க தனிப்பட்ட முறையில் தனக்கு நிதியுதவி வழங்கியதாகவும் சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளாார்.

Comments

comments

Related posts