பெண்கள் பாலியல் பற்றி பேசினால் ஒழுக்கமற்றவர்களா?

ஹாலிவுட் திரைபடங்களில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து பெரிய பெண் அதிரடி ஹீரோயினாக உருவெடுத்து வலம்வந்து கொண்டிருக்கிறார்.

அழகு, திறமை இரண்டும் சரிவிகிதம் கொண்டுள்ள இவர் பெண்கள் செக்ஸ் பற்றி அச்சம் இன்றி பேச வேண்டும் என்றும், ஆண், பெண் சமநிலை அனைத்திலும் அவசியம் என்றும் சமீபத்தில் கருத்து தெரிவிததுள்ளார்

ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமீபத்தில் காஸ்மோபாலிட்டன் இதழுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் உடலுறவு பற்றி தைரியமாக பேச வேண்டும்.

இந்த சமூகம் பெண்கள் உடலுறவு பற்றி பேசினால் மட்டும் அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாக பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.

பெண் ஒரு உடலுறவு பற்றி பேசினால் இந்த சமூகம் அவரை பைத்தியம், புத்திக் கேட்டவள், ஒழுக்கம் அற்றவள் என வரையறை செய்துவிடுகிறது.

ஆண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அது சாதாரண பேச்சு, அத்தியாவசியம். இதுவே ஒரு பெண் செக்ஸ் பற்றி பேசினால் அவளை தவறான வார்த்தை பயன்படுத்தி தகாத வார்த்தைகளில் வசைப்பாட துவங்கிவிடுகிறது இந்த சமூகம்.

நமது ஊர்களிலும் மட்டும் தான் இப்படி என்று பார்த்தல். உலகில் எல்லா நாடுகளிலும் ஆண், பெண் பாகுபாடு ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.

சமூகத்தில் முதலில் ஆண், பெண் சமநிலை பிறக்க வேண்டும். அப்போது தான் இந்த வேறுபாடுகள் மறையும்.

ஸ்கார்லெட் ஜோஹன்சன் பெண்கள் செக்ஸ் பற்றி வெளிப்படையாக தைரியமாக பேச வேண்டும். செக்ஸ் என்பது இயற்கை, இயல்பான விஷயம் அதை பற்றி பேச பெண்கள் எப்போதும் அச்சப்படக் கூடாது. மேலும், ஆண், பெண் சமநிலை மிகவும் அவசியம், இந்நிலை கொண்டுவர வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Comments

comments

Related posts