தின பலன் – 11 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக்கொடுத்து உதவுவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க் ராசி ரிஷபம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன் ராசி மிதுனம் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி…

Read More

மட்டக்களப்பில் கார் விபத்து – ஒருவர் பலி – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாசிக்குடாவில் இருந்து கும்புருமூலை பகுதிக்கு வந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையில் இருந்து விலகிச் சென்று மதில் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீரகல தெரிவித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்த நபர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான சாமரரத்ன சுதேஸ் கரணா என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலமானது மருத்துவ பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகள்! – படம் இணைப்பு

இரத்தினபுரி சமனல காட்டுக்கு அழகு சேர்க்கும் வகையில் பல நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. இந்த காட்டுப் பகுதியில் மழையொன்றில் ஐந்துக்கும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியுள்ளன. அண்மையில் பெய்த அடைமழை காரணமாக இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவிய கடும் வறட்சியான காலநிலையை அடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நீர் அதிகரித்து,இவ்வாறு நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது.

Read More

பெண்கள் பாலியல் பற்றி பேசினால் ஒழுக்கமற்றவர்களா?

ஹாலிவுட் திரைபடங்களில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து பெரிய பெண் அதிரடி ஹீரோயினாக உருவெடுத்து வலம்வந்து கொண்டிருக்கிறார். அழகு, திறமை இரண்டும் சரிவிகிதம் கொண்டுள்ள இவர் பெண்கள் செக்ஸ் பற்றி அச்சம் இன்றி பேச வேண்டும் என்றும், ஆண், பெண் சமநிலை அனைத்திலும் அவசியம் என்றும் சமீபத்தில் கருத்து தெரிவிததுள்ளார் ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமீபத்தில் காஸ்மோபாலிட்டன் இதழுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் உடலுறவு பற்றி தைரியமாக பேச வேண்டும். இந்த சமூகம் பெண்கள் உடலுறவு பற்றி பேசினால் மட்டும் அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாக பார்க்கின்றனர் என கூறியுள்ளார். பெண் ஒரு உடலுறவு பற்றி பேசினால் இந்த சமூகம் அவரை பைத்தியம், புத்திக் கேட்டவள், ஒழுக்கம் அற்றவள் என வரையறை செய்துவிடுகிறது. ஆண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அது சாதாரண பேச்சு, அத்தியாவசியம். இதுவே ஒரு பெண்…

Read More

மியா கலீபா வின் சுவாரஸ்யமான மறுபக்கம் இது

காலத்தின் கட்டயாம் என்றும் கூறலாம் அல்லது சூழ்நிலை காரணமாக, அலைபாயும் மனதின் எண்ணங்கள் காரணமாக நம் வாழ்க்கை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திசை மாறலாம். 18+ ல் பார்ன் அறிந்திராத நபர்கள் மிகவும் குறைவு. அதிலும் தற்போதைய பார்ன் துறையில் மியா கலீஃபா என்ற பெயரை அறிந்திராதவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி தான் ஆச்சரியப்படுத்தும். பிறப்பும், வளர்ப்பும் சரியாக இருப்பினும் சூழ்நிலை ஒன்று போதும் புயலாய் ஒருவரின் வாழ்க்கையின் திசையை மாற்ற… மியா கலீஃபா பிறந்தது பெய்ரூட், லெபனான்-ல். பிறகு இவரது குடும்பம் 2000-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். மியா கலீஃபா டெக்சாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயது திரும்பிய உடனேயே மியா கலீஃபா அமெரிக்கர் ஒருவரை கடந்த பிப்ரவரி, 2011-ல் திருமணம் செய்துக் கொண்டார். மியா கலீஃபா,…

Read More

உங்கள் ‘பிறந்த தேதி’க்கு இதுதான் சரியான ‘தொழில்’..!

நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம். 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு உரிய கோள் சூரியன். இவர்கள் பிறவியிலேயே ஆளப் பிறந்தவர்கள். ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள் அதே நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும் தேர்ந்த நபர்கள். திருபாய் அம்பானி, ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் ஆகியோர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள்….

Read More

சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் விடுத்துள்ள மிரட்டல்

கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர். கத்தார் உடனான அத்தனை உறவுகளையும் முறிப்பதாக வளைகுடா நாடுகள் அறிவித்திருந்தன. தீவிரவாதத்துக்கு கத்தார் துணைபுரிவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றத்தை கத்தார் முற்றிலுமாக மறுத்து வருகிறது. இந்நிலையில், கத்தாரிடமிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறப்படும் தீவிரவாத அமைப்புகளுள் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், கத்தாருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கி வைத்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையாக தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐந்து பேர் முகமூடி அணிந்து பேசுகின்றனர். அதில், ‘தற்போது ஈரானுக்கு பிறகு, உங்களுக்கான முறைதான் சவுதி அரேபியா….

Read More

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு இனி தடை இல்லை

முகத்தை மறைத்து ஹெல்மட் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிள் பாவனையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Read More

பொசன் நிகழ்வுகளை பார்க்க சென்ற இளைஞர் பலியான சோகம் – படம் இணைப்பு

அனுராதபுரம் , கல்குளம பிரதேசத்தில் உந்துருளியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் தம்பகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவற்துறை தெரிவித்தது. நேற்று இரவு அனுராதபுர பிரதேசத்தில் பொசன் நிகழ்வுகளை பார்வையிட நண்பர்களுடன் சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞர் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது – படங்கள் இணைப்பு

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்றதுடன், இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்ததோடு வடமாகாண கல்வியமைச்சரும் இவ் விழாவில் பங்குகொண்டிருந்தார். இந்த நிகழ்வின் போது 219 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதில் பெளதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளும் உள்ளீர்க்கப்பட்டனர். அத்துடன் உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45…

Read More