பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பிருத்தானிய பவுண்ட்

பிரித்தானிய பவுண்டின் மதிப்பு 8 மாதங்களில் பாரிய சரிவை தற்போது சந்தித்துள்ளதாக இன்று காலை வெளியாகிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் மற்றும் யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டடின் பெறுமதி 2 வீதத்தில் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு அமைய பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவைாயன பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து வர்த்தக சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பவுண்டின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் திட்டம் இனி என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், யூரோவுக்கு எதிரான பிரித்தானிய பவுண்டின் பெறுமதி கிட்டத்தட்ட 2 வீதத்தில் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது, பவுண்டின் பெறுமதி பாரிய சரிவை சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

comments

Related posts