பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை! பிரித்தானிய பிரதமர்

தனது பதவியை இராஜினாமா செய்யும் எண்ணமில்லை என பிரித்தானியா பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியான Conservatives கட்சி 319 ஆசனங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து, அங்கு தொங்கு பாராளுமன்ற அமைப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தொழில் கட்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஏகோபித்த ஆதரவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தொழில் கட்சி 261 ஆசனங்களை பெற்றிருந்தது.

இதனைடுத்து பிரித்தானிய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொழில்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts