தின பலன் – 10 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி ரிஷபம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை ராசி மிதுனம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்….

Read More

நீங்க பிறந்த மாதத்தை சொல்லுங்க – உங்க காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்

உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, ஆனால் நீங்கள் பிறந்த மாதத்தைக் கொண்டு பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதுவும் உடலைத் தாக்கும் நோய்கள் அல்லது பிரச்சனைகள் முதல் செக்ஸ் வாழ்க்கை வரை பலவற்றை தெரிந்து கொள்ளலாம். இக்கட்டுரையில் நாம் இப்போது ஒருவரது பிறந்த மாதம் அவர்களது செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து தான் பார்க்கப் போகிறோம். டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். நீங்கள் விரும்பும் ஒரு நபர் உங்கள் மீது ஆர்வமாக இருக்கும் போது, அவர்களிடம் புதிய விஷயங்களை முயற்சி செய்ய விரும்புவீர்கள். முக்கியமாக படுக்கையில் உங்கள் துணை, எப்போதும் மிகவும் சந்தோஷமாக இருப்பர். நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தன் துணை மீது…

Read More

களனியில் இரகசிய திருமணம் செய்துகொண்ட அண்ணன், தங்கை!

அண்ணன் மற்றும் தங்கை திருமணம் செய்துக் கொண்ட சம்பவமொன்று களனி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் சிறுவயதில் பிள்ளைகள் இல்லாத தம்பதியினருக்கு வளர்ப்பதற்காக அவரது பெற்றோர்களால் வழங்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது வயது 21. இந்நிலையில், குறித்த பெண்ணின் மூத்த சகோதரன் அவர் வளர்க்கப்பட்ட வீட்டிற்கு அவரது தங்கையை பார்ப்பதற்காக வந்துள்ளார். பின்னர் , தொடர்ந்து அவரின் தங்கையை பார்க்க அவர் வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், பெண்ணின் சொந்த சகோதரன் என்ற படியால் வளர்ப்பு பெற்றோர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். பின்னர் இருவரும் வௌியில் பயணங்கள் சென்று வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் , ஒருநாள் வௌியில் சென்ற அவர்களின் வளர்ப்பு மகள் திரும்பி வராத நிலையில் வளர்ப்பு பெற்றோர் இது தொடர்பில் களனி காவற்துறையில் கடந்த மே மாதம் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த களனி…

Read More

என்னது…? வழுக்கை தலையில் தங்கம் கிடைக்குதா?

ஆப்ரிக்கா கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு தான் மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் மத்தியில் போதிய கல்வி அறிவு இல்லை. மேலும், இவர்கள் பலத்த மூல நம்பிக்கை மத்தியில் வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. இது போன்ற நிலையில், சமீபத்தில் இந்நாட்டில் இருக்கும் மிலாங்கே எனும் மாவட்டத்தில் யாரோ வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் கிடைக்கும் என புரளியை கொளுத்து போட்டுள்ளனர். மூட நம்பிக்கை நிறைந்த அந்நாட்டு மக்கள் இதை நம்பி, வழுக்கை தலையுடன் சுற்றிவந்த ஆண்களை தேடி பிடித்து கொலை செய்து தங்கம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த வினோத காரணத்தால் தொடரும் கொலை வழக்குகளால், மொசாம்பிக் போலீஸார் வழுக்கை தலையுடன் நடமாடி வரும் ஆண்கள் சற்று பத்திரமாக…

Read More

தமிழ் சினிமா ஹீரோயின்களை மேக்கப் இல்லாமல் பார்த்ததுண்டா?? இதில் யார் அழகு?

பொதுவாக நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது என்று பலர் சொல்வார்கள். அதற்கேற்றாற் போல் நடிகைகளும் மேக்கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அதனால் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பலர் பார்த்திருக்கவேமாட்டார்கள். ஆகவே இங்கு ஒருசில பிரபல நடிகைகள் மேக்கப் இல்லாமல் வெளியே வரும் போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, யார் மேக்கப் இல்லாமல் அழகாக இருக்கிறார்கள் என்று நீங்களே ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள்.

Read More

என்ன நியாயம் இது? – தேநீர் குடிக்கும் ஆசையில் இருந்து விடுபடவுள்ள மக்கள்

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புதிய விலை திருத்தத்திற்கு அமைய 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட தேநீர் 20 ரூபாவாகவும், முப்பத்தைந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பால் தேநீர் நாற்பது ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்தார். ஒரு குவளை தேநீரில் 10 கிராம் க்கும் குறைவான அளவிலேயே சீனியானது பயன்பட்டு வரும் நிலையில் ஒரு கிலோ சீனி 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில் 10 கிராம் க்கு ஒரு ரூபாயே…

Read More

ஞானசார குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் பதுங்கியிருக்கிறார்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரத்தில் நடைபெற்ற தர்ம உபதேசம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றுக்கொண்டிருந்த போது குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து ஞானசார தேரர் தலைமறைவானார். இதனையடுத்து, கிடைத்துள்ள தகவலுக்கு அமைய பொலிஸார் பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர். மேலும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிக்குமார் தொடர்பிலும் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில், ஞானசார தேரரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Read More

பெண்ணின் வேனை ஓட்டிய பிக்கு கைது

சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி அனுராதபுரத்தில் இருந்து குருணாகல் நோக்கி வேன் ஒன்றை ஓட்டிச் சென்ற பிக்கு ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனில் இருந்த மற்றைய நபருக்கும் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணொருவருக்கு சொந்தமான வேன் ஒன்றையே பிக்கு ஒட்டிச் சென்றுள்ளார். பொசன் வழிபாட்டுக்காக அனுராதபுரத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சட்டப்படி பௌத்த பிக்குமார் வாகனங்களை ஒட்டவும், சாரதி அனுமதிப் பத்திரங்களையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஞானசார விற்கு எதிரான கருத்து கூறிய நாமல் – விமர்சிக்கும் இனவாத முகநூல் பக்கங்கள்

ஞானாசார தேரர் தவறு இழைத்திருந்தால் அவருக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என பா உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ள கருத்துக்கு இனவாதத்தை பரப்பும் முகநூல்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த திங்களன்று தனியார் தொலைக்காட்சியில் இடபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்‌ஷ ஞானசார தேரர் தவறு இழைத்திருந்தால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கூறியுள்ளமையை குறிப்பிட்டு அவரை பெரும்பான்மை முகநூல்கள் விமர்சிக்க துவங்கியுள்ளன.

Read More

வீடியோ – யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு முன்னால் ஓட்டோ திருடன் பிடிபட்டான் – மக்கள் அடி உதை

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளில் அண்மைக்காலமாக திருடி வந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நையப்புடைத்தனர். யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இன்று (9) காலை திருடிய வேளை முச்சக்கர வண்டி உரிமையாளரால் கையும் களவுமாக இளைஞர் ஒருவர் பிடிபட்டார். குறித்த முச்சக்கரவண்டி உரிமையாளர் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்திருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இன்னோரு ஓட்டுனருடன் கதைத்துக்கொண்டிருந்த சமயம் தனிமையிலிருந்த ஆட்டோவிற்குள் குறித்த இளைஞன் புகுந்து எதையோ தேடியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தனது முச்சக்கர வண்டியை திரும்பி பார்த்த உரிமையாளரிற்கு நிலைமை விளங்கியது.உடனடியாக தனது நண்பர்களுடன் முச்சக்கரவண்டியின் பின்புறமாக வந்து திருட முயற்சி செய்த இளைஞனை பிடித்துள்ளார். பின்னர் குறித்த இளைஞன் அணிந்திருந்த சட்டையை கழற்றி கையை பின்புறமாக கட்டி மரத்தடியில் அமர்த்தி பொலிசாரிற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் பிடிபட்ட இளைஞனை பொதுமக்கள்…

Read More