மகர ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

மன உறுதியும், எதையும் கண்டு அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் மகர ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனியும், சுகாதிபதி செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் காரியத் தடைகள் ஏற்பட்டாலும் குரு பார்வையால் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை சொத்து வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தொழில் ஸ்தானாதிபதி யோகாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும்.

வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். குடும்ப ஸ்தானத்தை கேது அலங்கரிக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். எந்த காரியங்களிலும் குடும்பத்தினரின் ஆலோசனையைக் கேட்பது நலம். பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனத்தடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதூரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தைவிட செலவு கூடும். மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:

யோக நரசிம்மரை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், வியாழன், வெள்ளி.

Comments

comments

Related posts