தின பலன் – 9 ஜூன் 2017

தின பலன் ராசி மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட் ராசி ரிஷபம் பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா ராசி மிதுனம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்…

Read More

யாழ்ப்பாண சுண்டிக்குளி மாணவி ஆசிகாவுக்கு முதன்மை அரச கௌரவம்

இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு, 58 கிலோகிராம் நிறைப் பிரிவில், 136 கிலோகிராம் நிறையைத் தூக்கி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாய் விபச்சாரி தான்…. ஆனால், மகள் நியூயார்க் பல்கலைகழகத்தில் படிக்க போகிறார்!

விபச்சாரத்தில் யாரும் விருப்பப்பட்டு ஈடுபடுவதில்லை. பல வகைகளில் விபச்சாரத்தில் சிக்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர் விற்கப்பட்டு, சிலர் ஏமாற்றப்பட்டு, சிலர் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கு மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக. இதில், மூன்றாம் மகளாக பிறந்த அவதிப்படுபவர்கள் நிலை மிகவும் மோசமானது. தன் தாய் அனுதினம் படும் அவஸ்தையை அறிந்து, தானும் இந்த நரக குழியில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே வளர்ந்து மடியும் அப்பாவி ஜீவன்கள் அவர்கள். ஆனால், விபச்சாரிக்கு மகளாக பிறந்தால், விபச்சாரம் தான் செய்ய முடியுமா என்ன? உயர பறக்க முடியாதா.. வாழ்வில் சாதிக்க முடியாதா? என கேள்விகளை படிக்கட்டு ஆக்கி, நியூயார்க் பல்கலைகழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்று பறக்க போகிறார் அஸ்வினி. இது அஸ்வினி தனது வாழ்வில் கடந்து வந்த பாதை… நான் வாழ்வில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறேன். அப்போது என் வயது…

Read More

மீன ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குரு பார்வையால் பணத்தேவை பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமாகிய குரு ராசியைப் பார்க்கிறார். மேலும் பாக்கியஸ்தானத்தை சூரியன்புதன்தனாதிபதி செவ்வாய் ஆகியோரும் பார்க்கிறார்கள். நவீன விளம்பரங்களால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வருவீர்கள். தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…

Read More

ஆலயத்தின் உள்ளே மழை பெய்யும் அதிசயம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்திருக்கிறது பகவான் ஜெகந்நாதர் ஆலயம். இந்த கோவிலில் வருடந்தோறும் ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக, அந்த கோவிலின் உள் பகுதியில் மழை பெய்யத் தொடங்கிவிடுகிறது. ஏழு நாட்களும் மழை நிற்பதே இல்லையாம். ஆனால் வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோவிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் அந்த ஊர் மக்களுக்கே தெரியவில்லை. அந்த கோவிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு புரியாத புதிராகவே இன்று வரை…

Read More

சுசந்திக்கா ஜயசிங்க வின் பதக்கம் 25 கோடி ரூபாய்க்கு

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார். இந்த பதக்கத்தின் பெறுமதியை உலகம் அறிந்து கொண்டுள்ள போதிலும் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் அறிந்து கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்தவர்.

Read More

தெஹிவளையில் ரயில் மோதி ஒருவர் பலி

தெஹிவளை முகாந்திரம் வீதிக்கு அருகில் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருதானையில் இருந்து நேற்று மாலை மாத்தறை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இஷான நிரங்க பெரேரா என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சிங்கள இளைஞர்கள் மீது கிளிநொச்சியில் வாள்வெட்டு

கிளிநொச்சி நகர பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர் குழுவினரின் மோட்டார் சைக்கிள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது . கிளிநொச்சி நகர பகுதியில் வீழ்ந்து காணப்படும் நீர்த் தாங்கியை பார்வையிடுவதற்காக வருகைத் தந்த குழுவினர் மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம் அங்குவந்த இனந் தெரியாத நபர்கள் இருவர் தாக்குதலை மேற்கொகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் அவர்களது மோட்டர் சைக்கிள்களை அடித்து சேதமாகிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் காரணமாக கிளிநொச்சி நகர் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. கிளிநொச்சி பொலிஸாரின் முதற் கட்ட விசாரணைகளின் போது தாக்குதலை மேற்கொண்டவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை….

Read More

முஸ்லீம் கடைகளை தீக்கிரையாக்கியவர் வசமாக சிக்கினார்

நுகேகொட, மஹரகம பகுதிகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக மஹரகம தொடக்கம் நுகேகொடை வரையான பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் நான்கு தீக்கிரையாகி அழிந்து போயிருந்தன. குறித்த வர்த்தக நிலையங்கள் மின் ஒழுக்கு காரணமாகவே தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸாரும் அடித்துக் கூறியிருந்த நிலையில், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் முஸ்லிம் வர்த்தகர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தனர். எனினும் கடைசியாக நேற்று முன்தினம் விஜேராம சந்தியில் அமைந்திருந்த லெதர் மற்றும் கார்பட் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு எரியூட்டிய நபரின் சிசிடிவி பதிவு பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதனை நேரில் கண்ட சாட்சியொருவரும் முன் வந்திருந்தார். தொடர்ந்து குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார்…

Read More

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

அனுபவ அறிவும், செயல்திறனையும் பெற்ற கும்பராசியினரே, உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் கிரக அமைப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். ராசிக்கு நான்காம் இடத்தில் சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்க்கை பெறுவதால் வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி இருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகள் கூறியபடி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பாதிபதி குரு, குடும்ப ராசியைப்…

Read More