மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் தற்கொலைக்கு குதித்த மாணவன் மாயம்

மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாகமுனை, அம்பிளாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான புவனுசன் மாணவனே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் உயர் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Related posts