துலா ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

எளிதில் மற்றவரைக் கவரும் வகையில் திறமையாக செயல்படும் துலா ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதனின் சஞ்சாரம் செவ்வாய் வீட்டில் இருப்பதால் முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால், மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.

சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும். குடும்பஸ்தானத்தில் சனி இருந்தாலும் குடும்பாதிபதி செவ்வாயுடன் சூரியன் புதன் இணைந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பது பலமாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்கள் முன் கோபத்தைக் குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்னைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது, கூடுதல் மதிப்பெண் பெற உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர் களின் செய்கைகள் கோபத்தை தூண்டுவதாக இருக்கும். சக கலைஞர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். அனைவருடனும் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்துறையினர் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்:

சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, வெள்ளி.

Comments

comments

Related posts