கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

அடுத்தவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படும் கன்னி ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் குரு சஞ்சரிக்க ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் அனுகூலமாக இருக்கிறார். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது, எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமான புதன், சுக்கிரன் வீட்டில் அனுகூலமான சஞ்சாரத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்துச் செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பாதிபதி சுக்கிரன் அஷ்டமஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்ப ராசியை தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு குருவின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துகள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்:

ஐயப்பனை தினமும் வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வெள்ளி.

Comments

comments

Related posts