அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகள் இரண்டு மடங்காக உயர்வு

இலங்கை அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றி வரும் அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் கடமையாற்றி வரும் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தகர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அரசாங்கம் இரண்டு மடங்காக்கியுள்ளது.

பயணக் கொடுப்பனவு, தொலைபேசிக் கட்டண கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றன உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளும் இவ்வாறு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களில் அரச அதிகாரிகளினால் ஆற்றப்படும் சேவைகள் தொடர்பில் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதச் சம்பளம் முதல் இந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

Comments

comments

Related posts