மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

தோல்வியை வெற்றிப் படிகளாக ஆக்கிக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கிறார். வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவுத்தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால், யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். அதேசமயம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். உங்களின் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிட்டும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்னைகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். தலைமையைக் குறித்து தனிப்பட்ட நண்பர்களிடம் கூட புகார்கள் எதையும் பதிவு செய்ய வேண்டாம். தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து பிரச்னைகளை சந்திப்பது உங்களுக்கு நல்லது. உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கியநபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு பாடங்களை ஊன்றிப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்:

பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், வெள்ளி.

Comments

comments

Related posts