மதுப் பிரியர்களுக்கு ஓர் சோகமான செய்தி

பொசன் போயா உற்சவங்களை முன்னிட்டு, இன்று திங்கட்கிழமை (05) முதல் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு நாட்களுக்கு சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று கலால்வரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அந்த ஏழு நாட்களும், மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களிலும் சகல இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

அதுமட்டுமன்றி, விசேட சுற்றி வளைப்பு தேடுதல்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments

comments

Related posts