வரும் க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்படுகின்றது

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சையை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள அனர்த்தம் தொடர்பில் நேற்றைய தினம் காலி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருகிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தைச் சேரந்த பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையாக உயர் தர பரீட்சையை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தென்மாகாண சபை இணை அமைச்சர் யு.ஜீ.டீ.ஆரியதிலக்க சுட்டிக்காட்டியதற்கமைய ஜனாதிபதி இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Comments

comments

Related posts